ஜோசப் லிஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
==ஆய்வு==
நோய் நுண்மத்தடை அறுவை சிகிச்சை பற்றிய லிஸ்டரின் முதலாவது முக்கிய ஆய்வுக்கட்டுரை 1867 ஆம் ஆண்டில் வெளியானது. இது பற்றிய கருத்துகள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனினும் 1869 ஆம் ஆண்டின் [[எடின்பர்க்]] பல்கலைக் கழகத்தில் அறுவை சிகிச்சைப்பிரிவின் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. அந்தப் பதவியில் இவர் பணியாற்றிய 7 ஆண்டுகளில் இவருடைய புகழ் பரவியது. 1875 ஆம் ஆண்டில் இவர் [[ஜெர்மனி|ஜெர்மனியில்]] சுற்றுப் பயணம் செய்து தமது கொள்கைகள் குறித்தும், முறைகள் குறித்தும் சொற்பொழிவுகள் ஆற்றினார். அதற்கு அடுத்த ஆண்டில் [[அமெரிக்கா|அமெரிக்கவிலும்]] இவர் இதே போன்ற சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார். எனினும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு இவருடைய முறையில் நம்பிக்கை ஏற்படவில்லை.
1877 ஆம் ஆண்டில் [[லண்டன்|லண்டனிலுள்ள]] 'அரசர் கல்லூரியில்' அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவராக பதவியில் நியமிக்கப்பட்டார். இப்பதவியை இவர் 15 ஆண்டுகள் வகித்தார். அப்போது இவர் லண்டனில் தமது [[நோய் நுண்மத்தடை]] [[அறுவை சிகிச்சை]] முறைக்கு பலமுறை செயல் விளக்கம் செய்து காட்டினார். அதன் பின்னர் இவருடைய முறையில் மருத்துவர்கள் ஆர்வம் காட்டினர். இவருடைய கொள்கைகள் மேன்மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. லிஸ்டரின் வாழ்நாள்களிலேயே அவருடைய நுண்மத்தடை அறுவை சிகிச்சை முறையினை உலகெங்குமுள்ள மருத்துவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
 
==சிறப்புகள்==
லிஸ்டரின் [[கண்டுபிடிப்புகள்]] அறுவை சிகிச்சைத் துறையில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தின. லிஸ்டர் தமது தலை சிறந்த பணிக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றார். இவர் தேசிய அறிவியல் கழகத்தின்(Royal society) தலைவராக 5 ஆண்டுகள் பணியாற்றினார். [[விக்டோரியா]] அரசியாரின் சொந்த மருத்துவராகவும் பணி புரிந்தார். இவர் திருமணம் புரிந்து கொண்டார் ஆனால் குழந்தைகள் இல்லை. லிஸ்டர் 85 வயது வரை வாழ்ந்தார். இவர் [[இங்கிலாந்து|இங்கிலாந்திலுள்ள]] வால்மர் நகரில் 1912 -ல் காலமானார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜோசப்_லிஸ்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது