ஆலிவர் கிராம்வெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
 
==இளமை==
இங்கிலாந்திலுள்ள ஹன்டிங்டன் என்னும் ஊரில் 1599 ஆம் ஆண்டில் ஏப்ரல் 25 அன்று இராபர்ட் குரோம்வெல்- எலிசபெத் ஸ்டெவார்ட் என்பவருக்கு குரோம்வெல் மகனாப் பிறந்தார். இவரின் குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் ஆகும் இவர் தனது கிராமத்தில் ஒரு சீமானாக வாழ்ந்து வந்தார். குரோம்வெல் பக்தி மிகுந்த ஆனால் கடுஞ்சீர்திருத்தச் சமயவாதியாகவும் (Purtian)விளங்கினார்.கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள சிட்னி சஸ்ஸெக்ஸ் கல்லூரியில்(Sidney Sussex College) சேர்ந்து இவர் சமயக் கல்வியைப் பயின்றார். ஆனால் இவருடைய தந்தை இறந்ததன் காரணமாக இவர் 1617-ல் பட்டம் பெறாமலேயே தனது கிராமத்திற்குத் திரும்ப வேண்டியதாயிற்று. 1628 ஆம் ஆண்டில் [[இங்கிலாந்து]] நாடாளுமன்றத்திற்கு தமது 30 ஆம் வயதில் தேர்ந்த்தெடுக்கப்பட்டார். இவர் தமது இளமைக் காலத்தில் சமயப் பூசல்களால் அலக்கழித்துக் கொண்டிருந்த இங்கிலாந்தில் வாழ்ந்தார். அப்போது வரம்பற்ற [[முடியாட்சி]] மீது நம்பிக்கை கொண்டு அதை நடைமுறைப் படுத்த விரும்பிய [[முதலாம் சார்லஸ்]] மன்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தை]] ஆண்டு வந்தார். எனவே 1629 -ல் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தாமே நாட்டை ஆளத் தொடங்கினார். எனவே கிராம்வெல் நாடாளுமன்ற உறுப்பினராக சிறிது காலமே பணியாற்றினார். 12 ஆண்டுகள் வரையில் [[சார்லஸ்]] மன்னர் நாடாளு மன்றத்தைக் கூட்டவே இல்லை.<br />
குரோம்வெல் 1620-ல் எலிசபெத் என்ற மங்கையை மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 9 குழந்தைகள் பிறாந்தனர். எலிசபெத்தின் தந்தை லண்டனில் ஒரு பெரிய தோல் வணிகராகவும், எஸ்ஸெக்ஸ் என்ற நகரில் பல பரந்த நிலப்பரப்புகளுக்குச் சொந்தக்காரராகவும் இருந்தார். அதனால் அங்கு உயர்தட்டு மக்களிடையே அவர் செல்வாக்கு பெற்றவராக விளங்கினார். இந்தத் திருமணம் மூலமாக ஆலிவர் செயின்ட் ஜான் மற்றும் லண்டன் வணிக சமூகத்தின் முன்னணி உறுப்பினர்கள் தொடர்பு குரோம்வெல்லுக்குக் கிடைத்தது.இதனால் வார்விக் மற்றும் ஹாலந்திலும் குரோம்வெல்லுக்கு செல்வாக்கு கிட்டியது. கிராம்வெல்லின் இராணுவ மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு இந்த செல்வாக்கு போதுமானதாக இருந்தது.
 
==உள்நாட்டுப் போர்==
"https://ta.wikipedia.org/wiki/ஆலிவர்_கிராம்வெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது