ஆலிவர் கிராம்வெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
==மக்கள் பொதுவுரிமை அரசு==
மன்னர் இறந்தபின் இங்கிலாந்தில் குரோம்வெல்லைத் தலைவராகக் கொண்டு மக்கள் பொதுவுரிமை அரசு என்ற பெயர் கொண்ட ஒர் ஆட்சி மன்றம் (Council of State) தற்காலிகமாக நாட்டை ஆண்டது. இக்காலத்தில் எஞ்சியிருந்தததெல்லாம் பிரதிநிதித்துவம் வாய்ந்திராத ஒரு சிறிய, தீவிரவாத சிறுபான்மைக் குழுமமே ஆகும். பல கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு தொடர்ந்திருந்த இந்தக் குழுமம் "எச்சமா மன்றம்"(The Rump) என்று அழைக்கப்பட்டது. அயர்லாந்துப்போர் (1949-1950) மற்றும் ஸ்காட்லாந்துப் போர் (1950-1951) ஆகியவற்றுக்குப் பின் குரோம்வெல் முதலில் புதிய தேர்தல்கள் நடத்துவது குறித்துப் பேச்சுகள் நடத்த முயன்றார். ஆனால், இந்தப் பேச்சுகள் தோல்வியடைந்ததும், எச்சமா மன்றத்தைக 1653 -ல் கலைத்தார். அது முதல் 1658 -ல் குரோம்வெல் இறக்கும் வரையில் மூன்று வெவ்வேறு நாடாளுமன்றங்கள் அமைக்கப்பட்டு கலைக்கப்பட்டது. இரு வெவ்வேறு அரசமைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் இவற்றில் எதுவும் வெற்றிகரமாகச் செயல்படவில்லை. இந்தக் கால அளவு முழுவதும் இராணுவத்தின் ஆதரவுடன் குரோம்வெல் ஆட்சி புரிந்தார்.
==அயர்லாந்து-ஸ்காட்லாந்துப் போர்கள்==
குரோம்வெல்லின் ஆட்சி காலத்தில் அரசரின் ஆதரவாளர்கள் விரைவிலேயே அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் வலைமை பெற்றார்கள். அவர்கள் இறந்து போன அரசனின் புதல்வன் இரண்டாம் சார்லசுக்கு ஆதரவு அளித்தார்கள். இதனால் இங்கு போர் மூண்டது. குரோம்வெல்லின் படைகள் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து மீதும் படையெடுத்து அவர்களை முறியடித்தன. 1649-1951 வரை அடுத்தடுத்து நடந்த இந்த நீண்டகாலப் போரில் இறுதியாக 1652-ல் அரசரின் ஆதரவுப்படைகள் தோற்கடிக்கப்பட்டன. இதனால் போர் முடிவடைந்தது.
 
==குரோம்வெல்லின் ஆட்சி முறை==
நடைமுறையில் குரோம்வெல் ஓர் இராணுவ சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர் தமது ஆட்சிக் காலத்தில் பல முறை மக்களாட்சி நடைமுறைகளைப் புகுத்த முயன்றார். அவருக்கு அரச பதவி வழங்கப்பட்ட போது அதை ஏற்க மறுத்தார். நன்கு செயல்படக்கூடிய ஓர் அரசு முறையை அவருடைய ஆதரவாளர்களால் நிறுவ முடியாமற்போனதன் காரணமாக, வேறு வழியின்றி சர்வாதிகார ஆட்சியை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு அவர் உள்ளானார்.<br />
"https://ta.wikipedia.org/wiki/ஆலிவர்_கிராம்வெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது