ஆலிவர் கிராம்வெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
| battles = [[Battle of Gainsborough|Gainsborough]]; [[Battle of Marston Moor|Marston Moor]]; [[Second Battle of Newbury|Newbury II]]; [[Battle of Naseby|Naseby]]; [[Battle of Langport|Langport]]; [[Battle of Preston (1648)|Preston]]; [[Battle of Dunbar (1650)|Dunbar]]; [[Battle of Worcester|Worcester]]
}}
'''ஆலிவர் கிராம்வெல்''' (''Oliver Cromwell'', '''ஒலிவர் குரொம்வெல்''', 25 ஏப்ரல் 1599 – 3 செப்டம்பர் 1658) [[இங்கிலாந்து|இங்கிலாந்தின]] பெருந்திறமை வாய்ந்த எழுச்சியூட்டும் இராணுவத் தலைவராக விளங்கியவர். இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு வெற்றி தேடித் தந்தவர்தந்த செயல் வீரர். இவர் இங்கிலாந்தின் வரம்பற்ற [[முடியாட்சி]] முறையை மாற்றி [[நாடாளுமன்ற முறை|நாடாளுமன்ற மக்களாட்சி]] அரச முறையாக அமைப்பதற்கு மூல காரணமாக இருந்தவர்.
 
==இளமை==
வரிசை 60:
==குரோம்வெல்லின் ஆட்சி முறை==
நடைமுறையில் குரோம்வெல் ஓர் இராணுவ சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர் தமது ஆட்சிக் காலத்தில் பல முறை மக்களாட்சி நடைமுறைகளைப் புகுத்த முயன்றார். அவருக்கு அரச பதவி வழங்கப்பட்ட போது அதை ஏற்க மறுத்தார். நன்கு செயல்படக்கூடிய ஓர் அரசு முறையை அவருடைய ஆதரவாளர்களால் நிறுவ முடியாமற்போனதன் காரணமாக, வேறு வழியின்றி சர்வாதிகார ஆட்சியை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு அவர் உள்ளானார்.<br />
குரோம்வெல் "ஆட்சிக் காவலர் பெருமகனார்" (Lord Protector) என்ற பட்டத்துடன் 1653 முதல் 1658 வரையில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை ஆண்டார். இந்த 5 ஆண்டு காலத்தில் குரோம்வெல் பிரித்தானியாவுக்குப் பொதுவான ஒரு நல்லரசை வ்ழங்கினார். சீரான நிருவாக முறாஇயை ஏற்படுத்தினார். கடுமையான சட்டங்கள் பலவற்றை சீர்படுத்தினார். கல்வி கற்பதை ஆதரித்தார். சமயப் பொறையுடைமையில் குரோம்வெல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் முதலாம் எட்வர்டு மன்னரால் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்கள் இங்கிலாந்தில் மீண்டும் குடியேறவும் அவர்கள் தங்கள் சமயத்தைப் பயிலவும் அவர் அனுமதியளித்தார். குரோம்வெல் வெற்றிகரமான ஒரு அயல்நாட்டுக் கொள்கையையும் செயல்படுத்தினார். இவர் ஒரு போதும் அரச பதவியை ஏற்றுக் கொள்ளவோ நிரந்தரமாக சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தவோ முயலவிலலை. அவருடைய ஆட்சி பெரும்பாலும் நடுநிலையானதாகவும் சமரச நோக்குடையதாகவும் விளங்கியது. குரோம்வெல் பெற்ற வெற்றிகளின் பயனாக, இங்கிலாந்தில் மக்களாட்சி அரச முறை வெற்றிபெற்று வலுப்பெற்றது. குரோம்வெல் 1658-ஆம் ஆண்டு லண்டனில் மலேரியா நோய் கண்டு இறந்தார்.
==வரம்புடை மக்களாட்சி==
குரோம்வெல்லுக்குப் பிறகு அவருடைய மூத்த மகன் ரிச்சர்டு குரோம்வெல் ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் மிகக் குறுகிய காலமே ஆட்சி நடத்தினார். 1660-ல் இரண்டாம் சார்லசுக்கு மீண்டும் அரச பதவி அளிக்கப்பட்டது. ஆலிவர் குரோம்வெல்லின் சடலம் கல்லறையில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு ஒரு கம்பத்தில் தூக்கிலிடப்பட்டது. இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையால் வரம்பற்ற முடியாட்சியை ஏற்படுத்த நடந்த போராட்டம் படு தோல்வி அடைந்தது. இதை உணர்ந்த இரண்டாம் சார்லஸ் நாடாளுமன்றத்தின் மேலாண்மை உரிமையை ஒரு போதும் எதிர்க்கவில்லை. அவருக்குப் பின் அரியணை ஏறிய இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் மீண்டும் வரம்பற்ற முடியாட்சியை ஏற்படுத்த முயன்ற போஹ்டு 1688-ல் நடந்த இரத்தம் சிந்தாப் புரட்சியில் அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இதன் விளைவாக "வரம்புடை முடியாட்சி" (Constitutional Monarchy) இங்கிலாந்தில் அமைந்தது. இதன் படி அரசர் திட்டவட்டமாக நாடாளுமன்றத்திற்கு கீழமைந்தவரானார். அத்துடன் சமயப் பொறையுடைமைக் கொள்கையும் அரசின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக அமைந்தது.
==உசாத்துணை==
 
மைக்கேல் ஹெச்.ஹார்ட், 100 பேர் (புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை), மீரா பதிப்பகம்-2008
 
[[பகுப்பு:1599 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆலிவர்_கிராம்வெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது