"மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

252 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==வரலாறு==
 
[[படிமம்:Kapaleeswarar Tank.jpg|thumb|250px|left|திருக்குளத்தின் எதிர்க் கரையிலிருந்து கபாலீஸ்வரர் கோயிலின் தோற்றம்]]
இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீஸ்வரர் கோயில் மிகவும் வழமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]], மயிலை கபாலீஸ்வரர் மீது [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/96386" இருந்து மீள்விக்கப்பட்டது