முகம்மது பின் துக்ளக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
rm in enwiki too..
வரிசை 8:
துக்ளக் தனது ஆட்சியில் தனது சுல்தானகத்தினை விரிவு படுத்தவேண்டி இந்திய தீபகற்ப்பம் முழுவதையும் வெல்ல நினைத்தார். சுல்தானகத்தை மேலும் வலுபெற வைக்கவேண்டி இவர் தலைநகரை [[தில்லி]]யில் இருந்து தேவகிரிக்கு மாற்றினார். இது தக்காணத்தில் இருந்து 1500 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. மேலும் தேவகிரியை தவுலதபாத் என பெயர்மாற்றினார். தலைநகரை நாட்டின் நடுவில் அமைப்பதன் மூலம் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும் என கருதினார். இதற்காக தில்லியில் இருந்து தேவகிரிக்கு சுலபமாக இடம்பெயரும் நிமித்தம் பிரமாண்டமாக சாலையும் போடப்பட்டது. ஆனால் சிறந்த திட்டமிடல் இல்லாத பணிகளால் இந்த புலம்பெயர்தலில் பலர் இறக்க நேரிட்டது மேலும் தேவகிரியில் நீர், தங்குமிடம், உணவு போன்ற வளங்கள் பற்றாமல் போனமையாலும் அரசு அதிகாரிகளில் வெறுப்பை பெருமளவில் இந்த திட்டம் சம்பாதித்தது. பின்னர் அமைச்சர்கள் மீண்டு தலைநகரை தில்லிக்கே மட்டற்ற கோரினர். மேலும் வடக்கில் மங்கோலியர்களின் படையெடுப்பும் இந்த திட்டத்திற்கு பெரும் சரிவாக அமைந்தது. பின்னர் இரண்டே வருடங்களில் மீண்டும் தலைநகர் தில்லிக்கே மாற்றப்பட்டது. இந்த புலம்பெயர்தலிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. அந்த சமையத்தில் தில்லி வெறிச்சோடி கிடந்ததாக வடக்கு ஆப்பிரிக்க பயணியரும் எழுத்தாளருமான இபின் பட்டுடா எழுதிய <br>'''When I entered Delhi, it was almost like a desert''' என்கிற வாசங்களில் இருந்து அறியப்படுகிறது.
 
==குஜராத்தில் முஹதாஜி கோஹில் உடன் போர்==
1347 இல் தற்போதைய [[பாவ்நகர்]] என்னுமிடமான [[க்ஹோகா]] மற்றும் [[பிரம்பெத்]] என்ற இடங்களை முஹதாஜி கோஹில் என்பவர் ஆண்டு வந்தார். சுல்தானாக விரிவாக்கத்திற்கும், போர் செலவுகளுக்குமாக தொகுக்கப்பட்ட பெரும் செல்வமானது தில்லியில் இருந்து தேவகிரிக்கு இடம்பெயர்த்த படுகிறது என்பதை அறிந்த முஹதாஜி கோஹில் அவற்றை கவர முடிவு செய்தார். அந்த திட்டத்தின் படிக்கு டெல்லியில் இருந்து தேவகிரிக்கு கொண்டு வரப்பட்ட செல்ல்வங்களையும் பெட்டகங்களையும் தனது கடற்படையின் மூலம் கொள்ளையடித்தார். சுல்தானாக படைவீரர்கள் பிரம்பெத்-ஐ சுற்றி வெளி போட்டு அந்த கொள்ளையை தடுக்க நினைத்தனர் ஆனால் கடல் போரில் தேர்ச்சி இல்லாத அவர்களால் கோஹில்-ஐ தடுக்க முடியவில்லை. இந்த வேலையில் முகம்மது பின் துக்ளக்-ம் அவரது சமூகமும் கோஹில் போரில் கொள்ளப்படும் வரை [[குஜராத்]]தில் தங்க வேண்டியதாயிற்று. ஆரம்பத்தில் முஹதாஜி கோஹில்-ஐ தந்திரமாக தரைப்போருக்கு அழைத்து வந்து அங்கு வைத்து சிறைபிடிக்கும் முன்பு வரைக்கும் துக்ளக்கினால் போரில் வெல்ல முடியவில்லை. இந்த நிகழ்வில் கோஹில்-ஐ தரைப்போருக்கு சம்மதிக்க வைத்த வைணவ வியாபாரிக்கு பெரும் வெகுமதிகள் தந்தார். அந்த வைணவ வியாபாரி முஹதாஜியிடம் சென்று பிரம்பெத்தின் மக்கள் சுல்தானின் படையினரால் ஆக்கிரமிக்கபட்டிருப்பதை கண்டுகொள்ளாமல் முஹதாஜி இருப்பதால் அவரை ஒரு கொடுங்கோலன் என்ற நோக்கில் மக்கள் பார்பதாக எடுத்துரைத்தார். இதன் பின்னரே முஹதாஜி தரைப்போரில் துக்ளக்கை சந்தித்து தோல்வியுற்றார். பின்னர் போர்க்கைதியாக பிடிபட்டு க்ஹோகா அருகில் சிரச்சேதம் செய்து கொல்லப்பட்டார்.
 
[[ca:Muhammad Shah II Tughluk]]
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_பின்_துக்ளக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது