அப்பல்லோ 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
 
அப்பல்லோ 15-ஆனது அமெரிக்க அப்பல்லோ விண்பயண திட்டத்தின் ஒன்பதாவது மனிதர் சென்ற திட்டமாகும். நிலவில் இறங்கும் வரிசையில் இது நான்காவது அப்பல்லோ திட்டமாகும். மேலும் வெற்றிகரமாக மனிதரை ஏற்றிச்சென்ற எட்டாவது திட்டமாகும். ''ஜெ திட்ட'' பயணவரிசையில் இது முதலாவதாகும். முந்தைய திட்டங்களைக் காட்டிலும் நிலவில் அதிக காலம் தங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, ''ஜெ திட்ட'' பயணவரிசையின் குறிக்கோளாகும். மேலும், ''நிலவு உலவு வாகனம்'' பயன்படுத்தப்பட்ட முதல் திட்டம் இதுவேயாகும்.
 
1971, சூலை 26 அன்று தொடங்கிய இத்திட்டம் ஆகத்து 7 அன்று முடிவுற்றது. இத்திட்டம் நிறைவுற்றபோது, [[நாசா]] 'இதுவே மனிதர் பயணித்த விண்திட்டங்களிலேயே பெருத்த வெற்றியை அளித்த திட்டமென' கூறியது.<ref name="autogenerated1971">[http://www.upi.com/Audio/Year_in_Review/Events-of-1971/12295509436546-1/#title "Apollo 15: 1971 Year in Review, UPI.com"]</ref>
 
இத்திட்டம் அதன் குறிக்கோள்களை பூர்த்தி செய்தாலும் விண்வெளி வீரர்கள் கொண்டுசென்ற அஞ்சல் தலைகளால் பெருத்த எதிர்மறையான விளம்பரத்தை மக்களிடையே சம்பாதித்தது. (பூமிக்கு திரும்பிய பின்னர் அஞ்சல் தலைகளை விற்கும் எண்ணத்தில் அவற்றை கொண்டுசென்றிருந்தனர் விண்வெளிவீரர்கள்.)
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/அப்பல்லோ_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது