அப்பல்லோ 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
 
1971, சூலை 26 அன்று தொடங்கிய இத்திட்டம் ஆகத்து 7 அன்று முடிவுற்றது. இத்திட்டம் நிறைவுற்றபோது, [[நாசா]] 'இதுவே மனிதர் பயணித்த விண்திட்டங்களிலேயே பெருத்த வெற்றியை அளித்த திட்டமென' கூறியது.<ref name="autogenerated1971">[http://www.upi.com/Audio/Year_in_Review/Events-of-1971/12295509436546-1/#title "Apollo 15: 1971 Year in Review, UPI.com"]</ref>
 
திட்ட ஆணையாளர் 'டேவிட் ஸ்காட்' மற்றும் நிலவுக் கலன் விமானி 'ஜேம்ஸ் இர்வின்' மூன்று நாட்கள் நிலவில் தங்கி ஆய்வுகள் செய்தனர். அதில் 18½ மணி நேரம் நிலவுக் கலனைவிட்டு வெளியிலிருந்து ஆய்வுகள் செய்தனர்.(Extra-vehicular activity) இத்திட்டத்தில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட நிலவு உலவி வாகனத்தைக் கொண்டு நிலவிலிறங்கிய நிலவுக்கலனிலிருந்து வெகுதூரங்கள் சென்று ஆய்வுகள் செய்ய முடிந்தது. பூமியில் ஆய்வுசெய்வதற்காக 77கி.கி. நிலவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன. அதே நேரத்தில், கட்டளைக் கலன் விமானியான 'ஆல்பிரட் வார்டன்' கலனிலிருந்தபடியே நிலவைச் சுற்றிவந்து ஆய்வுகள் செய்தார். நிலவின் மேற்பரப்பு மற்றும் சூழலை ஆழ்ந்து ஆராய்வதற்காக கட்டளைக் கலனில் 'அறிவியல் உபகரண கலன்' கொண்டுசெல்லப்பட்டிருந்தது. அதில் இருந்த அகலப்பரப்பு நிழற்படக்கருவி, காமா கதிர் நிறமாலைமானி, நிலவியல் படக்கணிப்பு நிழற்படக்கருவி, லேசர் உயரமானி, பதிவு நிறமாலைமானி மற்றும் நிலவைச் சுற்றும் துணை-செயற்கைக்கோள் (அப்பல்லோ 15 திட்ட முடிவில் ஏவி இயக்கவைக்கப்பட்டது - அப்பல்லோ திட்டங்களிலேயே இத்தகைய செயற்கைக்கோள் ஏவப்பட்டது இதுவே முதல்முறை) ஆகியவற்றின் உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
 
இத்திட்டம் அதன் குறிக்கோள்களை பூர்த்தி செய்தாலும் விண்வெளி வீரர்கள் கொண்டுசென்ற அஞ்சல் தலைகளால் பெருத்த எதிர்மறையான விளம்பரத்தை மக்களிடையே சம்பாதித்தது. (பூமிக்கு திரும்பிய பின்னர் அஞ்சல் தலைகளை விற்கும் எண்ணத்தில் அவற்றை கொண்டுசென்றிருந்தனர் விண்வெளிவீரர்கள்.)
"https://ta.wikipedia.org/wiki/அப்பல்லோ_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது