"மாடர்ன் தியேட்டர்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
==கொள்கைகள்==
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை டி.ஆர்.சுந்தரம் ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் ஒரு தொழிற்சாலையைப் போல நடத்தலானார். [[திரைப்படம்]] மூலமாகப் பிரச்சாரம் செய்வது, சமூக சீர்திறுத்தம்சீர்திருத்தம் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஏதுமின்றி மக்கள் விரும்பிப் பார்த்து மகிழும்படியான பொழுதுபோக்குப் படங்களைத் தரமாகக் கொடுக்க வேண்டுமென்பதுதான்வேண்டுமென்பது தான் இவரின் நோக்கமாக இருந்தது. [[திரைப்படம்]] என்பது மக்களை மகிழ்விக்க வந்த ஒரு சாதனம், அதில் பொழுதுபோக்கும், மகிழ்ச்சியும்தான் இருக்க வேண்டும், தேவையில்லாத மற்ற பிரச்சினைகள் அதற்குள் தலையிடாமல் இருக்க வேண்டுமென விழிப்புடன் டி.ஆர்.சுந்தரம் தனது கொள்கைகளை நிறைவேற்றி வந்தார். [[நகைச்சுவை]] நடிகர்கள் 'காளி என்.ரத்தினம்', 'டி.எஸ்.துரைராஜ்', 'வி.எம்.ஏழுமலை', 'ஏ.கருணாநிதி' ஆகியோர், இங்கு மாத சம்பளத்துக்கு வேலை பார்த்தனர். படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் தொடங்கி, குறிப்பிட்ட தேதியில் முடியவேண்டும் என்பதில் சுந்தரம் கண்டிப்பாக இருந்தார்.
 
==பணியாளர்கள்==
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சுமார் 250 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.சுந்தரம் தமது நிறுவனத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல் படுத்தினார். நடிகைகள் உள்ள பகுதிக்கு, நடிகர்கள் போகக்கூடாது. கதை வசனம் முழுமையாகத் தயாரான பிறகுதான், நடிகர் நடிகைகள் யார் என்பது முடிவாகும். நன்றாக ஒத்திகை பார்த்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும்.இங்கு நடிக்க வந்த நடிகர்கள் கூட ஒரு தொழிலாளர்களைப் போல சரியான நேரத்துக்கு வருவது, கட்டுப்பாட்டோடு பணியாற்றுவது, வீண் வம்பு, விவகாரம் இவற்றில் ஈடுபடாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது என்று இருந்தார்கள். நடிகர், நடிகைகள் ஒப்பந்த முறையில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். அங்கு சேர்ந்து அறிமுகமாகி, புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர்களில் எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், அஞ்சலி தேவி இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
14,983

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/969563" இருந்து மீள்விக்கப்பட்டது