மாடர்ன் தியேட்டர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
 
==பணியாளர்கள்==
[[சேலம்]] மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சுமார் 250 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.சுந்தரம் தமது நிறுவனத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல் படுத்தினார். நடிகைகள் உள்ள பகுதிக்கு, நடிகர்கள் போகக்கூடாது. கதை வசனம் முழுமையாகத் தயாரான பிறகுதான், [[நடிகர்]] [[நடிகைகள்]] யார் என்பது முடிவாகும். நன்றாக [[ஒத்திகை]] பார்த்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும்.இங்கு நடிக்க வந்த நடிகர்கள் கூட ஒரு தொழிலாளர்களைப் போல சரியான நேரத்துக்கு வருவது, கட்டுப்பாட்டோடு பணியாற்றுவது, வீண் வம்பு, விவகாரம் இவற்றில் ஈடுபடாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது என்று இருந்தார்கள். [[நடிகர்]], [[நடிகைகள்]] ஒப்பந்த முறையில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். அங்கு சேர்ந்து அறிமுகமாகி, புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர்களில் [[எம்.ஆர்.ராதா]], [[எஸ்.வி.ரங்காராவ்]], [[அஞ்சலி தேவி]] இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
 
==புதுமைகள்==
தன்னுடைய படங்கள், தொழில் நுட்பத்தில் சிறந்தவையாக அமைய வேண்டும் என்று சுந்தரம் விரும்பினார். ஜெர்மனியில் இருந்து வாக்கர், பேய்ஸ் என்ற இரண்டு கேமராமேன்களை வரவழைத்தார். இவர்கள் தந்திரக்காட்சிகள் எடுப்பதில் வல்லவர்கள். இவர்களிடம் பயிற்சி பெற்ற டபிள்யு.ஆர்.சுப்பாராவ், ஜே.ஜி.விஜயம் ஆகியோர், பிற்காலத்தில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களாகத் திகழ்ந்தனர். படத்தில் நடிகர்_நடிகைகளின் பெயர்களையும், கலைஞர்களின் பெயர்களையும் காண்பிக்கும் முகப்புக் காட்சியில் படத்துக்குப்படம் புதுமையை சுந்தரம் புகுத்தினார். அதற்காக பெரும் பணம் செலவழித்தார்.அமெரிக்க இயக்குனரான எல்லிஸ் ஆர்.டங்கன், இவரது படங்களுக்கு இயக்குநராக அமைந்தார். ஆங்கிலம் பேசும் ஒரு அமெரிக்கர் தமிழில் படம் இயக்கியது அக்காலத்தில் ஓர் அதிசயமாகக் கருதப்பட்டது. டி.ஆர்.எஸ். தயாரிப்பில், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களை வைத்து எல்லிஸ் ஆர்.டங்கன் 1950இல் இயக்கிய படம் 'மந்திரிகுமாரி'. அதில் எம்.ஜி.ஆர். அவர்களின் வாளெடுத்துப் போர் புரியும் அழகு மக்களால் ரசிக்கப்பட்டது. அந்தப் படத்தின் வசனங்கள் புதுமை, வேகம்,விறுவிறுப்பு கொண்டு சிறப்பாக விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/மாடர்ன்_தியேட்டர்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது