"24 மனை தெலுங்குச்செட்டியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15,300 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{துப்புரவு}}
==இன வரலாறு==
[[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] வீழ்ச்சிக்குப் பிறகு, தஞ்சாவூரும் மதுரையும் நாயக்க மன்னர்கள் வசம் வந்தது. இந்த சமயம் [[தெலுங்கு]] பேசும் [[திராவிடர்|திராவிட]] இனமக்கள் பலர் மதுரை, தஞ்சாவூர்,கோவை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரத்தொடங்கினர். இப்படி வந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் 24 மனை தெலுங்குச் செட்டியார்கள். இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. [[தமிழ்நாடு]] முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் [[மதுரை]], [[தேனி]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]] மற்றும் [[சென்னை]] பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
===வடுகர்===
வளஞ்சியர் என்ற வாணிகக் குழுவினைப்பற்றி முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய காட்டூர்க் கல்வெட்டு1 ஒன்று விரிவான செய்திகளைக்கூறுகின்றது. இவர்கள் குழுவில் செட்டிகள், செட்டிப் பிள்ளைகள் ... ஆகியவர்களும் சேர்ந்திருந்தனர். தனம் வடுகர் என்போரின் மூதாதையரே வளஞ்சியர் என்று மற்றொரு சோழர் கல்வெட்டிலிருந்து அறியலாம்2. சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்துவந்தனர். “வடுகர்” என்றாலே வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று பொருள்.
"கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்" (நற். 212 : 5),
===வணிகர்கள் (சாத்தர்கள்)===
வணிகப் பொருள்கள் சாத்து எனப்படும். வணிகப் பொருள்களை வண்டிகளிலும், பொதி எருதுகளின் மீதும் ஏற்றிச் சென்றுள்ளனர். அவைகளின் மூட்டைகள் பொதி என்றும், பாக்கம் என்றும் அழைக்கப்பட்டன. அதனால் வணிகர்கள் சாத்தர் எனப்பட்டனர். வணிகர்கள் ஓர் ஊருக்குப் பொருள்களைக் கொண்டு சென்று விற்பதுடன், அங்கு கிடைக்கும் பொருள்களைத் தம் ஊர்க்கும் வாங்கி வந்தனர். எனவே அவர்கள் இருவழி வணிகமும் செய்தனர். "சாது செட்டி" என்ற பெயர் கூட "சாத்து" என்ற சொல்லையொட்டி தோன்றியிருக்கலாம்.
===வணிக குழுக்கள் (Merchants Guild)===
பண்டைய சோழ நாட்டில் பெரும் வணிக குழுக்கள் இருந்தன. இந்த வணிகர்கள் சாத்து (கூட்டம்) பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. செட்டியார்கள் அனைவரும் முதலில்(சிலப்பதிகாரக் காலத்தில்) தனவணிகர் என்றே அழைக்கப் பட்டனர். இவர்களே புதிய அரசனின் சிரசில் மணிமுடியைச் சூடும் தனிமதிப்பைக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் வணிகர் மரபில் பெண்கள் குறைந்த போது வெள்ளாளர்களில் பெண் எடுத்தனர்.
கல்வெட்டுகளில் பல்வேறு வணிகக் குழுவினர் பெயர்கள் காணப்படுகின்றன. நானாதேசி, திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், ஆயிரவர், பன்னிரண்டார், இருபத்துநான்கு மனையார், நகரத்தார், வளஞ்சியர், அஞ்சு வண்ணம், சித்திரமேழிப் பெரியநாடு என அவர்கள் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.
===வணிக பெருவழிகள்===
வணிக மையங்களை இணைப்பவை பெருவழிகள் (trunk roads). திருவிடந்தை குறித்த கல்வெட்டில், "வடுகப் பெருவழி' எனும் பெயர் வந்துள்ளது3. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் வணிகர் குழுவினர் நிர்வாகித்து வந்த காவல் வீரர்களைப் பற்றிய குறிப்பு வருகிறது. சோழ சக்ரவர்த்தி முதற் குலோத்துங்க சோழன் (1070-1120) காலத்தில் வணிகர்கள் படைவீரர்களையும், தளபதிகளையும் தங்களுடைய காவற்படையினராக அமர்த்தி ஊதியம் வழங்கி பராமரித்தார்கள். இது போன்ற பாதுகாப்பு அளிக்க அரசு சுங்க வரி கூட வசூலித்ததாம்4. வணிகப் பெருவழிகளான காரைக்கால் பெருவழி, தஞ்சாவூர் பெருவழி, கொங்கர் பெருவழி, பெண்ணாற்றுப் பெருவழி [இது தென்பெண்ணை ஆற்றை ஒட்டி, தகடூரில் இருந்து திருக்கோவிலூர் வரை இருந்திருக்கிறது.], இராசகேசரிப் பெருவழி [இது கொங்கு நாட்டில் இருந்து சேரநாட்டுக்குச் செல்லும் பாலக்காட்டுக் கணவாயை ஒட்டியது]. மகதேசன் பெருவழி [சேலம் மாவட்டம் ஆறுகழூரில் இருந்து காஞ்சிபுரம் வரை சென்றது.] போன்ற பெருவழிப்பாதைகளில் எரி வீரர் படை வணிகர்களுக்கு பாதுகாப்பளித்தது.
===விஜயநகரப் பேரரசு===
பதிமூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மாலிக் காபூரின் படையெடுப்பு தென்னகத்தின் வலிமை வாய்ந்த சேர, சோழ, பாண்டிய பேரரசுகளை எல்லாம் அழித்து தென்னிந்தியாவை, குறிப்பாக தமிழகத்தையே சீர்குலைத்து நிலைகுளையச் செய்ததது. வழிபாட்டுத் தளங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன. இடிபாடுகளும் சுடுகாடுகளும் மட்டும் மிஞ்சியது. மீண்டது. மாலிக் காபூர் விட்டுச்சென்ற தளபதிகள் சிற்றரசர்களாக மாறி கொள்ளையடித்தலையே ஆட்சியாகச் செய்துவந்தனர். பதினான்காம் நூற்றாண்டில் முகலாய படையெடுப்பு மற்றும் தில்லி சுல்தான்களின் காட்டாட்சி இந்துக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்துக்கள் ஒன்றாக இணைந்து விஜயநகரப் பேரரசு என்ற புதிய பேரரசை உருவாக்கினர். ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் வலிவிழந்த சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது.
இதனை தொடர்ந்து இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைத் தோற்றுவித்தன. பல படையெடுப்புகளுக்குப் பின்பு [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசு]] தம் ஆட்சியை தென்னிந்தியா முழுவதும் கைப்பற்றி விரிவு படுத்தியது. தமிழகப் பகுதிகளை வேலூர், சந்திரகிரி, தஞ்சை, மதுரை திருவதிகை (செஞ்சி), என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் ஒருமண்டலேசுவரரை நியமித்தனர்.
மகாமண்டலேசுவரருக்குக் கீழ்ப்பட்டிருந்த இராஜ்யங்கள் எனப்பட்ட பிரிவுகளுக்கு நாயக்கர் என்ற பதவியில் உள்ளூர் ஆளுநர்களை நியமித்து பேரரசின் பல்வேறு பகுதிகளை ஆட்சிச் செய்யுமாறு விஜயநகரப் பேரரசு ஏற்பாடு செய்தது.
===கம்பளதார், நாயக்கர்===
விஜயநகரப் பேரரசில் நாட்டை அல்லது [[கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள்|பாளையத்தை]] (குறுநிலத்தை) நிர்வாகித்தவர்கள் [[நாயக்கர்|நாயக்கர்]] என்று அழைக்கப்பட்டனர். நாயக்கர் என்பது ஒரு பட்டமாகும். [[ராஜகம்பளம்|கம்பளதார்களின்]] உதவியால் தான் [[தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி|தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி]] வந்தது. அதனால் தான் பெரும்பாலான பாளையம் இவர்களால் ஆளப்பட்டுள்ளது. கம்பளத்தார்கள் இல்லை என்றால் தமிழ் நாட்டில் இத்துணை காலம் விஜயநகர பேரரசு, நாயக்கர் ஆட்சி அமைந்து இருக்காது.
===காப்பு, பலிஜா, கவரை, கம்மா இனத்தவர்கள்===
ஆந்திர மாநிலத்தின் வரண்ட பாறைகள் சூழ்ந்த ராயலசீமா என்ற நிலப்பகுதியில் ஆடு மாடு மேய்த்து வாழ்ந்தவர்களே இந்தக் கம்பளத்தார்கள். கம்பளத்தார் என்பது ஒரு இடப்பெயர். இவர்கள் ஆந்திராவில் மிக பெரிய சமுதாயமான காப்பு (சாதி ) இனத்தவர்களின் கிளை சாதியினராக கருதபடுகிறார்கள். பேரரசர் கிருஷ்ணதேவராயர் இந்த காப்பு இனத்தை சேர்ந்தவரே. காப்பு என்ற இனத்திலிருந்து கிளைவிட்டது தான் பலிஜா இனம். பலிஜா இனத்திலிருந்து கொல்லவார், தொக்லவார், கம்மா மற்றும் கவரை இனங்கள் கிளைத்தன. பலிஜா இனத்தவர்கள் நாய்டு மற்றும் செட்டி என்ற பட்டங்களைப் பெற்றனர்.
===செட்டி பலிஜா===
பலிஜா இனத்திலிருந்து செட்டி பலிஜா என்னும் வணிகர்களும், நாயுடு பலிஜா என்னும் படைத்தலைவர்களும் தோன்றினர். செட்டி பலிஜாக்கள் செல்வாக்கு மிகுந்த தனவணிகர்களாக உருவெடுத்தனர். இவர்கள் “தேசாதிபதி“ என்றும் பெயர் பெற்றனர். விஜயநகரப் பேரரசு தமிழ்ப் பகுதிகளில் வேர்விட்டு நிலைபெற்ற இவ்விரு நூற்றாண்டுகளிலேயே பெரும் எண்ணிக்கையில் [[தெலுங்கு]] பேசும் பல இனத்தை சேர்ந்த [[திராவிடர்|திராவிட]] மக்கள் தமிழ்நாட்டுக்கு (மதுரை, தஞ்சாவூர்,செஞ்சி போன்ற பகுதிகளுக்கு) இடம் பெயர்ந்தனர். புலம் பெயர்ந்த செட்டி பலிஜாக்கள் கொங்கு நாட்டில் வணிகம் செய்து வந்தனர். தகுந்த ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், செட்டி பலிஜாக்கள் இனத்திலிருந்து தான் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தோன்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
[[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] வீழ்ச்சிக்குப் பிறகு, தஞ்சாவூரும் மதுரையும் நாயக்க மன்னர்கள் வசம் வந்தது. இந்த சமயம் [[தெலுங்கு]] பேசும் [[திராவிடர்|திராவிட]] இனமக்கள் பலர் மதுரை, தஞ்சாவூர்,கோவை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரத்தொடங்கினர். இப்படி வந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் 24 மனை தெலுங்குச் செட்டியார்கள். இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. [[தமிழ்நாடு]] முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் [[மதுரை]], [[தேனி]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]] மற்றும் [[சென்னை]] பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
 
==திருமண உறவுமுறை மற்றும் குலதெய்வ வழிபாடு ==
<ref>[http://thatstamil.oneindia.in/news/2000/03/07/sudali.html சிவராத்திரி கோவையில் தொடரும் விநோத பழக்கம்]</ref>
 
==மேற்கோள்கள் (ஆதாரங்கள்)==
{{1. சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=224&pno=327
{{Reflist}}
2. சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=224&pno=325
3. வணிகக்குழு http://www.tamilvu.org/courses/degree/c031/c0314/html/c0314664.htm
4. முதற் குலோத்துங்க சோழன் சுங்கம் தவிர்த்தது ஏன்? http://www.sishri.org/sungam.html}}
 
 
 
==வெளி இணைப்புகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/971599" இருந்து மீள்விக்கப்பட்டது