"பம்பை (இசைக்கருவி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
==பம்பைக்காரன்==
பம்பை என்னும் இந்த இசைக் கருவியைஇசைக்கருவியை வாசிப்பவர் தமிழ் நாட்டில் பம்பைக்காரன் என்றும் ஆந்திராவில் "பாம்பால" என்றும் அழைக்கப்படுகிறார். திருமணம் மற்றும் கோவில் விழாக்களில் பம்பை இசைக்கப்படுகிறது. நாட்டுப்புற கோவில் விழாக்களில் சக்தி கரகம் அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பம்பையை இசைத்தபடி அங்காளபரமேஸ்வரி கதைப் பாடல்களை பாடுகின்றனர். 24 மனை தெலுங்கு செட்டியார் குலதெய்வக் கோவில்களில் பம்பைக்காரரின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். பெரும்பாலும் இவர்கள் கோவில் ஊழியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.
 
==நாட்டுப்புற ஆட்டங்களுக்கு பின்னணி வாத்தியம்==
மேலும் இந்த இசைக்கருவி நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கும் பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது. நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி ஒரு தாளம் கொண்டதாகும். கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது.
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/977802" இருந்து மீள்விக்கப்பட்டது