35,545
தொகுப்புகள்
("சீதை, சங்கப்பாடல் இராமாய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
இராமாயணப் பாடலில் வரும் சீதை பற்றிய செய்தி ஒன்றைச் சங்கப்பாடல் தெரிவிக்கிறது.
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தன்னைப் பாடிய புலவர் ஊன்பொதி பசுங்குடையாருக்கு பலவகையான அணிகலன்களைப் பரிசாக வழங்கினான். புலவரின் சுற்றம் அந்த அணிகலன்களை முன்பின் பார்த்ததில்லை. எனவே அவர்கள் விரலில் அணியவேண்டுவனவற்றைக் காதிலும், காதில் அணியவேண்டுவனவற்றை விரலிலும், இடுப்பில் அணியவேண்டுவனவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணியவேண்டுவனவற்றை இடுப்பிலும் அணிந்துகொண்டனராம். இது எப்படி இருந்தது என்றால் இராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை இராவண அரக்கன் கொண்டுசென்றபோது அவள் தன் அணிகலன்களை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்துகொண்டு சென்றதைக் கண்ட குரங்குகள் எங்கு அணிந்துகொள்வது எனத் தெரியாமல் அணிந்துகொண்டதைப் போல இருந்ததாம்.
:இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல்,
:விரற்செறி மரபின செவித்தொடக்குநரும்,
:செவித்தொடர் மரபின விரற் செறிக்குநரும்,
:அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
:மிடற்கு அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
:கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை,
:வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை,
:நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்,
:செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்தாங்கு (அணிந்துகொண்டனர்) – புறநானூறு 378</ref>
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
|