அ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
==எழுத்து முறையில் "அ"==
[[படிமம்:Writing_Tamil_2.gif|thumb|250px|'அ' எழுதும் முறை]]
முறை என்பது எழுத்துக்களின் ஒழுங்கு. தமிழ் நெடுங்கணக்கில் '''அ''' முதல் எழுத்தாக வைக்கப்பட்டுள்ளது என்று முன்னரே கூறப்பட்டது. அகரம் தானும் இயங்கித் தனி மெய்களையும் இயங்கவைக்கும் சிறப்பால் முதலில் வைக்கப்பட்டது என்று [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] உரையில் [[இளம்பூரணர்]] கூறுகிறார்<ref>''[[தொல்காப்பியம்]] [[எழுத்ததிகாரம்]] - [[இளம்பூரணர்]] உரை'', 2006 பக். 10</ref>. உயிரெழுத்துக்கள் எல்லாமே தாமும் தனித்தியங்கி, மெய்களையும் இயங்கவைப்பதால் உயிர்கள் அனைத்தும் மெய்களுக்கு முன் வைக்கப்பட்டன என்றும், உயிர்களுள்ளும் '''அ'''. '''ஆ''' என்பன பிற உறுப்புக்களின் முயற்சியின்றிப் பிற உயிர்களிலும் குறைந்த முயற்சியுடன் அங்காந்து கூறுவதனால் மட்டும் உருவாவதால் அவை முன் வைக்கப்பட்டன என்றும், '''ஆ''', '''அ''' வின் விகாரமே என்பதால் '''அ''' முதலில் வைக்கப்பட்டது என்பதும் [[நன்னூல் விருத்தியுரை]]யில் விருத்தியுரையில் தரப்படும் விளக்கம் ஆகும்<ref>''நன்னூல் விருத்தியுரை'', 2004 பக். 49</ref>.
 
=="அ" வும் மெய்யெழுத்துக்களும்==
"https://ta.wikipedia.org/wiki/அ" இலிருந்து மீள்விக்கப்பட்டது