சலங்கையாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சலங்கையாட்டம்''' தமிழ் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''சலங்கையாட்டம்''' தமிழ் நாட்டின் [[கோவை]], [[ஈரோடு]], [[நாமக்கல்]], [[கரூர்]], [[சேலம்]], [[தர்மபுரி]] மாவட்டங்களை உள்ளடக்கிய [[கொங்கு மண்டலம்|கொங்கு மண்டலத்தின்]] உள்ள குறிப்பிட்ட ஊர்களில் நடைபெறும் ஒருவகை ஆட்டம் ஆகும். சலங்கையாட்டம் பண்டிகை காலங்களில் இரவில் உள்ளூர் மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலுக்கும் சுற்றி ஆடப்படிகிறது. சலங்கையாட்டத்திற்கான இசை தாரை, தப்பட்டை, மத்தாளம் மற்றும் நாயனத்தைக் கொண்டு வாசிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தை ஆடுபவர்கள் காலில் சலங்கைகளை கட்டிக்கொண்டு ஆடுவதால் சலங்கையாட்டம் என்று வழங்கப்படுகிறது. சலங்கையாட்டம் நடைபெறும் அனைத்து ஊர்களிலும் இந்த ஆட்டம் பொதுமக்களால் ஆடப்படுகிறது, இதற்கென்று கலைஞர்கள் இலர்.

நாமக்கல் மாவட்டத்தின் [[சிங்களாந்தபுரம்|சிங்களாந்தபுரத்தில்]] கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மாரியம்மன் திருவிழாவின் பொழுது சலங்கையாட்டம் நடைபெறுகிறது, இங்கு நடைபெறும் சலங்கையாட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரால் மட்டும் ஆடப்படுகிறது, ஆனால் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் சலங்கையாட்டங்கள் பெரும்பாலூம் அனைத்து சமூகத்தினராலும் ஆடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சலங்கையாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது