"ஆர்மோனியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
==வரலாறு==
[[Image:Traditional harmonium played in manhattan apartment.JPG|right|thumb|250px|தென்னாசியப் பாணியிலான இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய ஆர்மோனியம்]]
பிரெஞ்சு நாட்டவரான [[அலெக்சாண்டர் தெபைன்]] என்பவர் 1840 ஆம் ஆண்டில், முதன் முதலாக இதனை உருவாக்கினார், எனினும், இது போன்ற வேறு இசைக்கருவிகள் வேறு பலராலும் இதே காலத்தில் உருவாக்கப்பட்டன.<ref>{{cite web | url=http://www.harmoniums.com/hist_en.htm | title=History of the reed organ | accessdate=2010-08-06}}</ref> 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேலை நாடுகளில் இதன் பயன்பாடு உச்ச நிலையில் இருந்தது. இது, பெரிய [[தேவாலயம்|தேவாலயங்களில்]] பயன்படுத்தப்பட்ட [[குளாய்குழாய் ஆர்கன்]]களை விட அளவில் சிறியனவாகவும், மலிவாகவும் இருந்ததனால், அக்காலத்தில், சிறிய தேவாலயங்களிலும் சிற்றாலயங்களிலும் இதனை விரும்பிப் பயன்படுத்தினர். எடுத்துச் செல்வதற்கு இலகுவாக இருந்த இக்கருவி அக்கால [[ஐரோப்பா|ஐரோப்பிய]] வல்லரசுகளின் [[குடியேற்ற நாடு]]களுக்கும் பரவியது.
 
 
 
மேலை நாட்டு அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தென்னாசிய ஆர்மோனியங்கள் அப்பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல மாற்றங்களைப் பெற்றன. தென்னாசிய இசைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சுரங்களை ஒரே நேரத்தில் வாசிக்க வேண்டிய தேவை இல்லாததனால் விசைப்பலகைகளை இயக்க இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. அத்துடன் தென்னாசிய இசைக் கலைஞர்கள் நிலத்தில் இருந்தே நிகழ்ச்சிகளை நடத்துவதால், மேலை நாட்டு ஆர்மோனியங்களில் இருந்ததுபோல் கால்கள் போன்ற கீழ் அமைப்புக்கள் எதுவும் தேவையாக இருக்கவில்லை. துருத்தியும், மறு கையால் இயக்குவதற்கு வசதியாகக் கருவியின் பின்புறத்தில் அமைக்கப்பட்டது.
 
 
==அமைப்பு==
15,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/981140" இருந்து மீள்விக்கப்பட்டது