பழைமைவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி பழமைவாதம், பழைமைவாதம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பழைமை எழுத்துமுறை, பேச்சில் ஐகா...
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பழமைவாதம்பழைமைவாதம்''' என்பது, [[மரபு]]களுக்கு முன்னுரிமை கொடுக்கும் [[அரசியல் கொள்கை]]களைக் குறிக்கும் ஒரு [[சொல்]]. இங்கே மரபு என்பது, பல்வேறு [[மதம்|மத]], பண்பாட்டு, அல்லது [[நம்பிக்கை]]கள், வழமைகள் போன்றவற்றைக் குறிக்கிறது. வெவ்வேறு [[பண்பாடு]]களில் வெவ்வேறான சமூகப் பெறுமானங்கள் நிலைபெற்றிருப்பதன் காரணமாகப் பழமைவாதம் என்பதைத் துல்லியமாக வரையறுப்பது கடினமாகும். சில பழமைவாதிகள் அவ்வக்காலத்து நிலையைப் பேணிக்கொள்ளவோ அல்லது சீர்திருத்தங்களை மெதுவாகச் செய்யவோ விரும்புவர். வேறு சிலர் தமக்கு முந்திய காலப் பெறுமானங்களை மீள்விக்க விரும்புவர்.
 
ஒரு பண்பாட்டுக்கு உள்ளேயே பழமைவாதம் என்றால் என்ன என்பது குறித்துக் கருத்து வேறுபாடுகள் காணப்படலாம். [[சாமுவேல் பிரான்சிஸ்]] என்பவர் பழமைவாதம் என்பது, "குறிப்பிட்ட மக்களையும், அவர்களுடைய நிறுவனப்படுத்தப்பட்ட பண்பாட்டு வெளிப்பாடுகளையும் நிலைத்திருக்கச் செய்வதும் அவற்றை மேம்படுத்துவதும் ஆகும்" என்றார். [[ரோஜர் ஸ்கிரட்டன்]] என்பவர் பழமைவாதம் என்பதை "சமுதாயச் சூழ்நிலையைப் பேணுதல்" என்றும், "சமூகத்தின் வாழ்வையும், நலத்தையும் இருக்கும் நிலையிலேயே எவ்வளவு காலத்துக்கு முடியுமோ அவ்வளவு காலத்துக்குப் பேணும் நோக்குடனான தாமதப்படுத்தும் அரசியல்" என்றும் வரையறுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பழைமைவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது