மரவள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
மரவள்ளி பயிரிடப்படும் இடங்களில் வாழும் மக்கள் மரவள்ளியைப் பயன்படுத்திப் பல வகையான உணவுப் பொருள்களைச் சமைத்து உண்கின்றனர். இவற்றுட் சில உணவு வகைகள் பிரதேச, தேசிய, இன முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன. மரவள்ளியைச் சமைக்கும் போது அதிலிருந்து நச்சுப் பொருள் நீக்கி முறையாகச் சமைக்க வேண்டும். அத்துடன், மரவள்ளியைச் சமைக்கும்போது [[இஞ்சி]]யைக் கலந்து சமைத்தல் அல்லது மரவள்ளி உணவுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருள்களை உட்கொள்ளல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என அறியப்பட்டுள்ளது.
 
தோலுரித்த மரவள்ளிக் கிழங்கை வெறுமனே அவித்து உண்பது உலகின் பல பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. இதனைத் துணைக் கறிகளுடன் ஒரு வேளை உணவாகப் பயன்படுத்துவதும் உண்டு. அவித்த கிழங்கை [[மிளகாய்]], [[உப்பு]] போன்ற பொருட்களுடன் சேர்த்து உரலில் இட்டு இடித்து உண்பதும் உண்டு. கிழங்கைக் குறுக்காக மெல்லிய சீவல்களாக வட்டம் வட்டமாகச் சீவி, எண்ணெயில் இட்டுப் பொரித்து உண்பதுண்டு. இது பொதுவாக சிற்றுண்டியாகவே பயன்படுகின்றது. இப் பொரியலைப் பல நாட்கள் வைத்து உண்ண முடியும் என்பதால், இவற்றை நெகிழிப் பைகளில் அடைத்து விற்பதுடன் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
===மரவள்ளிக் கிழங்கு-பொரிப்பு மற்றும் மாவு===
* கிழங்கு மாவு தயாரிக்கப்பட்டு அரிசி மாவிற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றது
* இது பல விலங்குகளின் உணவுகளில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.
* தொழில்துறையில் இது உற்பத்தி ஸ்டார்ச், தெக்கிரின், குளுக்கோஸ் மற்றும் எத்தில் தயாரிக்க ஒரு மூல பொருளாக விளங்குகிறது.
*கிழங்குபொரிப்புகள்,முறுக்குகள் செய்யப்பட்டு நெகிழிப் பைகளில் அடைத்து கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற பல்வேறு பகுதிகளில் வணிகரீதியாக சிற்றுண்டியாக விற்கப்படுகிறது. விரல் பொறிப்புகள், வேஃபர்கள், சவ்வரிசி வடகங்கள், அப்பளங்கள் ஆகியவை மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் சிற்றுண்டி உணவு பொருட்களின் சில.
* இது ஒரு முக்கியமான குடிசை தொழிலாக உளது.
 
==காகிதம் மற்றும் ஜவுளி==
*மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பல்வேறு துறைகளில், குறிப்பாக பருத்தி மற்றும் சணல் ஆடைகள் உற்பத்தி, காகிதம் மற்றும கெட்டி அட்டைகள் தயாரிக்கும் தொழில் ஆகியவற்றில் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மரவள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது