சிலந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு விரிவு
சிறு விரிவு + திருத்தம்
வரிசை 28:
 
 
சிலந்திகளின் உடல், வழக்கமாக கணுக்காலிகளில் காணப்படும், ''இருபகுதிபல்பகுதி உடலமைப்பு'' கொண்டது எனினும் பிற கணுக்காலிகளில் இல்லாதவாறு, இதன் இருபகுதியான உடற்பகுதிகள் இணைந்து இருக்கின்றன. கணுக்காலிகளில் அறுகால் பூச்சிகளில் காணப்படுவது போன்ற உணர்விழைகள் சிலந்திகளுக்குக் கிடையா. சிலந்திகளுக்கு நஞ்சு பாய்ச்சும், கொடுக்கு போன்ற வாய்ப்பகுதி உண்டு. இதனைக் ''கெலிசெரே'' (Chelicerae) என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர் (கிரேக்கச் சொல் keras என்றால் கொம்பு என்று பொருள் (cera <keras)). சிலந்துகளின் இருபகுதி உடலமைப்பு என்பதை இரு ''டாக்மாட்டா'' (''tagmta'') என்று கூறுவது வழக்கம். <ref>டாக்மா என்னும் கிரேக்கச் சொல்லுக்கு "ஒன்றை ஒழுங்கமைக்கப்பட்டது", "something arranged" என்று பொருள். ''டாக்மா'' (tagma) என்னும் சொல் ஒருமை வடிமம். ''டாக்மாட்டா'' என்பது ''டாக்மா'' என்பதன் பன்மைச் சொல்வடிவம். உசாத்துணை Oxford English Dictionary, Second Edition, 1989</ref>. இந்த இரு உடற்பகுதிகளும் ''ஒருங்கிணைந்து ஒட்டிய'' வடிவில் உள்ளது. ஒருபகுதியில் தலையும், செஞ்சுப்பகுதியும் உள்ளது. இதனைத் ''தலை-நெஞ்சகம்'' அலலதுஅல்லது ''செபாலோ-தோராக்சுதோராக்ஃசு'' (cephalothorax) அல்லது புரோசோமா (prosoma) என்றும், மற்றதை ''வயிறு'' (abdomen) அல்லது ஓப்பிசுத்தோசோமா (opisthosoma) என்றும் அழைக்கின்றனர். தலை-நெஞ்சகமும், வயிற்றுப்பகுதியும் ஆன இவ்விரு பகுதிகளையும் மெல்லிய உருளை வடிவான இணைப்புத் தண்டு இணைக்கின்றது. இந்த இணைப்புத்தண்டை ''பெடிசெல்'' (pedicel) என்பர். இதன் குடல் மிகமிகச் சிறியதாகையால் சிலந்திகள் பெரிய கெட்டியான பொருளை உட்கொள்ள இயலாது. சவைக்கும் வாய்ப்பகுதியும் கிடையாது. எனவே, சிலந்திகள் தான் உண்னும் கெட்டியான பொருளை தன் உடலில் உருவாகும் [[நொதி]]களைக் கொண்டு [[நீர்மம்|நீர்மமாக்கிவிடுகின்றது]]. சிலந்தி இன வகைகளின் எளிமையான ''[[மெசொத்தெலே]]'' (''Mesothelae'') என்னும் வகையைத் தவிர, மற்ற எல்லா வகையான சிலந்திகளிலும், மற்ற கணுக்காலிகளைப் போல் அல்லாமல், சிறப்பாக நடுவிருந்து கட்டுப்படுத்தும் ''நரம்புமண்டலம்'' உள்ளது. மற்ற கணுக்காலிகளில் இருப்பதைப் போன்று தன் கால்களில் வெகுவாக மடக்கி நீட்டக்கூடிய தசைகள் இல்லை. ஆனால் அவற்றுக்கும் மாறாக, வயிற்றுப் பகுதியில் உள்ள நூலிழை நூற்கும் சுரப்பிகள் உள்ளன. தன் உடலில் ஒன்று முதல் ஆறுவகையான நூல்நூற்கும் சுரப்பிகள் வயிற்றுப்பகுதியில் உண்டு. சிலந்திநூல் மிகவும் மெலிதாக இருந்தாலும், அதன் அளவை ஒப்பிடும்பொழுது அது மிகுந்த வலிமையும், மிகுந்த நீட்சித்திறனும் (''elasticity'') கொண்டது . செயற்கையாக செய்யப்படும் நூலிழைகள் யாவற்றினும் வலிமை முதலான பண்புகளில் சிறந்தது.
 
[[படிமம்:Spider_main_organs_labelled.png|thumb|right|250px|சிலந்தியின் உள் உடலமைப்பு. 1) நச்சுக்கொடுக்கு, 2) நஞ்சுச் சுரபி, 3) மூளை, 4) வயிறு 5)முன் இரத்தக்குழாய், 6)செரிக்கும் பெருங்குடல், 7)இதயம், 8)நடுக்குடல், 9)கழிமுகக் குழாய் (Malpighian tubules), 10)கழித்துளைப் பை 11) பின் இரத்தக்குழாய், 12) நூல்நூற்பியகம், 13) நூற்சுரபி, 14) மூச்சுக்குழல், 15) கருப்பை (பெண்பால்)16 மடிபுத்தகவடிவு வளிபரிமாற்றகம் (Book lung), 17) நரம்பு தண்டு, 18) கால்கள், 19) கொடுக்கு (Pedipalp)]]
"https://ta.wikipedia.org/wiki/சிலந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது