நண்பர்களின் சமய சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: குவேக்கர், சியார்ச் ஃபாக்சு என மாற்றம் + சிறு உ தி.
→‎வரலாறு: குவேக்கர் சட்டம் 1662, கான்வெண்டிக்கிள் சட்டம் 1664 சேர்த்தல்
வரிசை 41:
[[File:George Fox.jpg|right|thumb|250px|[[ஆங்கிலம்|ஆங்கில]]சீர்திருத்தவாதி [[ஜியார்ஜ் ஃபாக்ஸ்]] 17ஆம் நூற்றாண்டின் முக்கிய குவாக்கர் ஆவார்]]
 
[[1600]]ஆம் ஆண்டு நண்பர்களின் சமய சமூகத்தை சியார்ச் ஃபாக்சு என்பவர் மூலம் தொடங்கியது. அவர் அனைத்து மனிதரும் கடவுளுடன் பேசலாம், அண்மித்து இருக்கலாம் என்று பென்டில் மலையில் நிகழ்த்திய உரையில் தெரிவித்தார். கடவுளை அணுக இடைப்பட்ட பாதிரிகள் வேண்டியதில்லை என்று வலியுறுத்தினார். இவரது கூற்றுக்களை விரும்பியவர்கள் இக்குழுவை அமைத்தனர். இப்புதிய "சமயத்தை" இங்கிலாந்து அரசு விரும்பவில்லை. குவேக்கர்களுக்கு எதிராக இங்கிலாந்து அரசு குவேக்கர் சட்டம் (1662), கான்வெண்டிக்கிள் சட்டம் (1664) (Conventicle Act 1664) என்பனவற்றை உருவாக்கி அவர்கள் ந்அம்பிக்கையை அழிக்கவோ, மாற்றவே முற்பட்டது. அந்தக் காலத்தில் [[இங்கிலாந்து திருச்சபை]]யில் இணையாதிருப்பது சட்டத்திற்கு புறம்பானது. பலரை சிறையில் அடைத்தும் கட்டணங்கள் வசூலித்தும் மாற்ற முயன்றது. துவக்கத்தில் குவேக்கர் என்ற சொல் இக்குழு உறுப்பினர்களை கிண்டல் செய்யவே பயன்படுத்தப்பட்டது. ஆயினும் இந்தச் சொல்லை விரும்பத்தொடங்கிய "நண்பர்கள்" தாங்களும் அவ்வாறே அழைத்துக்கொள்ளத் தொடங்கினர்.
 
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக இருந்தமையால் சில குவேக்கர்கள் அமெரிக்கா இடம் பெயர்ந்தனர். இவ்வாறு அமெரிக்கா சென்ற [[வில்லியம் பென்]] என்ற இளம் குவேக்கர், அரசர் சார்லசு-2 தமது தந்தைக்கு கடன்பட்டிருந்த பணத்திற்கு ஈடாக கொடுத்த நிலத்தில், புதிய குடியிருப்பொன்றை உருவாக்கினார். இக்காலனியே [[பென்சில்வேனியா]] என்று அழைக்கபடலாயிற்று. இங்கு யாவரும் அவரவருக்கு பிடித்தமான சமயத்தை கடைபிடிக்க தடையேதும் இல்லாதிருந்தது. தனது புதிய காலனியின் மிகப்பெரிய நகரைப் பென் "பிலடெல்பியா" - சகோதர அன்புடை நகரம்" என்று அழைத்தார். விரைவிலேயே அமெரிக்காவில் பல குவேகர்கள் குடியேறத் தொடங்கினர்.
"https://ta.wikipedia.org/wiki/நண்பர்களின்_சமய_சமூகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது