தொலைக் கட்டுப்படுத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''''தொலைக் கட்டுப்படுத்தி''''' (''Remote Control'') எனப்படுவது [[தொலைக்காட்சி]]ப் பெட்டி, குறுவட்டு இயக்கி போன்ற இலத்திரனியற் சாதனங்களைக் குறுகிய தூரத்திலிருந்து கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இலத்திரனியற் சாதனமாகும். தொலைக் கட்டுப்படுத்தியிலிருந்து சமிக்ஞைகள் [[அகச்சிவப்புக் கதிர்|செங்கீழ்க் கதிர்கள்]] மூலம் அனுப்பப்படுகின்றன. இன்றைய காலத்தில் [[திறக்கற்றை]], குரலாளுகை என்பனவற்றின் மூலமும் சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன.
 
=== தொலைக்காட்சிக்கான தொலைக் கட்டுப்படுத்தி ===
[[தொலைக்காட்சி]]யைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் தொலைக் கட்டுப்படுத்தி [[1950]]ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது [[தொலைக்காட்சி]]யுடன் ஒரு வடம் மூலம் இணைக்கப்பட்டது. ஒரு கம்பியில்லாத் தொலைக் கட்டுப்படுத்தி [[1955]]இல் உருவாக்கப்பட்டது. அது சூரிய மின்கலத்துக்கு ஒளியைப் பாய்ச்சுவதனூடாகச் செயற்பட்டது. ஆனால் அதனைப் பெறும் கருவியால் தொலைக் கட்டுப்படுத்தி மூலம் வழங்கப்படும் ஒளியையும் ஏனைய ஒளி முதல்களிலிருந்து வரும் ஒளியையும் வேறுபடுத்த முடியாமல் போய் விட்டது. பின்னர், மீயொலியைப் பயன்படுத்திச் சமிக்ஞைகளை அனுப்பும் தொலைக் கட்டுப்படுத்தி ஒன்று [[1956]]இல் உருவாக்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/தொலைக்_கட்டுப்படுத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது