விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
comedy உங்களுக்குக் காமடியாக இருப்பது எங்களுக்குக் கொமடியாக இருக்கிறது :-)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 69:
::செல்வா, சிறு தகவல். சில காலத்தின் முன்னர் நோபல் பரிசு பெற்றவர்கள் தொடர்பாக குறுங்கட்டுரைகளை எழுத முனைந்த பின்னர் அதனை நான் கைவிடக் காரணம் தலைப்புக்கள் மாற்றப்படுவதிலான அதிருப்தியே. comedy உங்களுக்குக் காமடியாக இருப்பது எங்களுக்குக் கொமடியாக இருக்கிறது :-) இவ்விடயத்தில் நான் விவாதிக்கப் போவதில்லை. 80% சிங்களவர் இருக்கிறோம். ஆதலால் நீங்களும் சிங்களம் படியுங்கள் என்பதைப் பல்லாண்டுகள் கேட்டு வந்துள்ளோம் என்ற குறிப்பை மட்டும் விட்டுச் செல்ல விரும்புகிறேன். 70-75 மில்லியன் தமிழர்களில் 5 மில்லியன் கூடத் தேறாது ஈழத் தமிழர் எண்ணிக்கை. இந்த எண்ணிக்கை விக்கிபீடியாப் பயனர்களிலும் பிரதிபலித்தால் மிக இயல்பாக பொதுத்தரம் பேணப்படுமே...[[பயனர்:கோபி|கோபி]] 14:30, 29 ஜனவரி 2007 (UTC)
_____________
 
எழுத்து தமிழில் பொதுத் தரம் பேணப்படுதலே தமிழின் மரபு, தமிழின் சிறப்புக்களில் ஒன்று. அனேகமாக இந்தப் பண்பு பேணப்படுகின்றது எனலாம். இருப்பினும் சில இடங்களில் நான் இன்னும் மேம்படலாம், குறிப்பாக வேற்று மொழிச் சொற்களின் எழுத்துக்கூட்டலில்.
 
தமிழில் பலக்குவது போலவே எழுத்துக்கூட்டல் அமையும். இதுவும் தமிழின் சிறப்பே. இந்த இயல்பு சொற்களுக்கான எழுத்துக்கூட்டலை நினைவில் சேகரிக்கும் தேவையை தவிர்க்கின்றது. ஆங்கிலம் அறிந்தவர்கள் ஆங்கிலத்தின் சீரற்ற எழுத்துக்கூட்டலின் (பலக்குவது போன்று எழுத்துக்கூட்டல் அமையாத தன்மை) குறைகளை நன்கு அறிவர்.
 
நாம் வேற்று மொழிச் சொற்களுக்கான எழுத்துக்கூட்டலுக்கான ஒரு பொதுத் தரம் என்ற பிரச்சினையில் மனிதர்களின் பெயர்களை, இடங்களின் பெயர்களையும் எழுத்துக்கூட்டும்பொழுது ஒரு விதியையும், நுட்ப மற்றும் பிற சொற்களை எழுத்துக்கூட்டும் பொழுது இன்னொரு விதியையும் இங்கு கடைப்பிடிக்க வேண்டி வரலாம். இலங்கையில் ஒரு சிங்கள இடத்தை இப்படித்தான் தமிழில் எழுதவார்கள் என்றால், அதைப் பின்பற்றி எழுதுவது நன்று. அதே இடத்தை தமிழ்நாட்டில் எப்படி பலக்குவார்கள் என்று எண்ணி எழுதவது நடைமுறைச் சாத்தியம் அற்றது. ஒருவரின் பெயரும் அப்படியே. இங்கே, தமிழர்கள் வாழும் இடங்களையும் அங்கே வாழும் மனிதர்களையும் பற்றியே குறிப்பிடுகின்றேன். பிற இடங்கள் பெயர்களில் ஒரு பொதுத் தரம் பேணப்படுவது நன்றே. அதற்கான கையேடு ஒன்றைத் தயாரித்தலும் அவசியம். எனவே மொழிபெயர்ப்பு எழுத்துக்கூட்டலில் பொதுத் தரம் (குறைந்த பட்சம் தமிழ் விக்கிபீடியாவில்) விரும்பத்தக்கதே. ஆனால் அது ஒரு நன்கு ஆராயப்பட்டு விபரமாக (comprehensive) உருவாக்கப்படவேண்டு. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 14:51, 29 ஜனவரி 2007 (UTC)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
[[பகுப்பு:விக்கிபீடியா]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பொதுவான_குறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது