வை. மு. கோதைநாயகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 121:
வை.மு.கோ. அம்மையார் இசையில் மிகுந்த ஈடுபாடுடையவராக விளங்கினார். [[கருநாடக இசை]]ப் பாடல்களைப் பாடுவதிலும் வல்லவராக இவர் இருந்தார். அவரது குரல் வளம், உச்சரிப்பு, பாடும் திறன் பலரை அவர் பாட்டுக்கு அடிமையாக்கியிருந்தது. காங்கிரஸ் மேடைகள் தோறும் நாட்டுப்பற்று உள்ள பாடல்களைஅம்மையார் பாடினார். அத்துடன் வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களின் இசைஆற்றலை வெளிக் கொணரப் பாடுபட்டுள்ளார். அந்த வரிசையில் ஒருவர் புகழ் பெற்ற [[டி. கே.பட்டம்மாள்]] ஆவார். வவை.மு.கோ. இனிய குரலில் பாடுவதை மெய்மறந்து பாரதியார் இரசித்ததாகக் கூறுவார்கள். மகாகவி பாரதியாரின் பாராட்டைப் பெற்றவர்.அம்மையார் வானொலியிலும் இசைநிகழ்ச்சிகளை வழங்கி அதனை இசைத்தட்டுக்களாகவும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
 
வை.மு.கோ. மேடைகளில் பாடுவதன்றி பல பாட்டுகளையும் புனைந்துள்ளார். இவர் சில அபூர்வ ராகங்களில் இயற்றிய கிருதிகள் எல்லாம் சமீபத்தில் 'இசை மார்க்கம்' என்ற புத்தகமாக வெளி வந்துள்ளன. முப்பதுகளில் வை.மு.கோ வீட்டில் வசித்த பி.ராமபத்ரன் என்பவர் இப்புத்தகத்தைப் பதிப்பித்துள்ளார். அம்பா மனோஹரி, கங்கணாலங்காரி, அம்சப்ரமாரி, தவளி ஹம்சி போன்ற அபூர்வ ராகங்களிலுள்ள இந்த கிருதிகள், கர்நாடக இசைப் பாட்கர்களால்பாடகர்களால் இப்போது மேடைகளில் பாடப்பட்டு வருகின்றன.
 
சுப்பிரமணிய பாரதியார், வை.மு.கோ.விற்காகவே தம் ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்ற பாட்டைப் புனைந்ததாகவும், பின்னர் டி.கே. பட்டம்மாள் இந்தப் பாட்டினால் பிரபலமானார் என்பது இன்னோர் செய்தி. <ref> சாருகேசி – ஹிந்து பத்திரிகையில் 13-2-2009</Ref>
"https://ta.wikipedia.org/wiki/வை._மு._கோதைநாயகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது