விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாலி, பொலி - என் கருத்துக்கள்
வரிசை 80:
தமிழில் பலக்குவது போலவே எழுத்துக்கூட்டல் அமையும். இதுவும் தமிழின் சிறப்பே. இந்த இயல்பு சொற்களுக்கான எழுத்துக்கூட்டலை நினைவில் சேகரிக்கும் தேவையை தவிர்க்கின்றது. ஆங்கிலம் அறிந்தவர்கள் ஆங்கிலத்தின் சீரற்ற எழுத்துக்கூட்டலின் (பலக்குவது போன்று எழுத்துக்கூட்டல் அமையாத தன்மை) குறைகளை நன்கு அறிவர்.
 
நாம் வேற்று மொழிச் சொற்களுக்கான எழுத்துக்கூட்டலுக்கான ஒரு பொதுத் தரம் என்ற பிரச்சினையில் மனிதர்களின் பெயர்களை, இடங்களின் பெயர்களையும் எழுத்துக்கூட்டும்பொழுது ஒரு விதியையும், நுட்ப மற்றும் பிற சொற்களை எழுத்துக்கூட்டும் பொழுது இன்னொரு விதியையும் இங்கு கடைப்பிடிக்க வேண்டி வரலாம். இலங்கையில் ஒரு சிங்கள இடத்தை இப்படித்தான் தமிழில் எழுதவார்கள் என்றால், அதைப் பின்பற்றி எழுதுவது நன்று. அதே இடத்தை தமிழ்நாட்டில் எப்படி பலக்குவார்கள் என்று எண்ணி எழுதவது நடைமுறைச் சாத்தியம் அற்றது. ஒருவரின் பெயரும் அப்படியே. இங்கே, தமிழர்கள் வாழும் இடங்களையும் அங்கே வாழும் மனிதர்களையும் பற்றியே குறிப்பிடுகின்றேன். பிற இடங்கள் பெயர்களில் ஒரு பொதுத் தரம் பேணப்படுவது நன்றே. அதற்கான கையேடு ஒன்றைத் தயாரித்தலும் அவசியம். எனவே மொழிபெயர்ப்பு எழுத்துக்கூட்டலில் பொதுத் தரம் (குறைந்த பட்சம் தமிழ் விக்கிபீடியாவில்) விரும்பத்தக்கதே. ஆனால் அது நன்கு ஆராயப்பட்டு விபரமாக (comprehensive) உருவாக்கப்படவேண்டு. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 14:51, 29 ஜனவரி 2007 (UTC)
 
இது போன்ற உரையாடல்கள் திரும்பத் திரும்ப வருவது கவலையளிக்கிறது. மேம்பட்ட புரிந்துணர்வுடன் நான் செயல்பட வேண்டும். குளோரைட்டு என்பதை chlorite என்று தான் உச்சரிக்க முடியும். ஆனால், cholride, chlorite ஆவது வேதிப்பூர்வமாகவே பிழையாகிவிடும். chloride என்பதற்கான சரியான உச்சரிப்பு மற்றும் எழுத்துக்கூட்டலாக குளோரைடு தான் இருக்க முடியும். இது விதயத்தில் மாற்றுக் கருத்துக்கள் அதிகம் இருக்காது என நம்புகிறேன்.
 
'''Poly என்பதை பாலி என்று எழுதக் கோருதல் தமிழகத் தமிழர்கள் அப்படி உச்சரிப்பதால் அல்ல. உலகில் ஆங்கிலம் பேசும் பெரும்பான்மையோர் அப்படி உச்சரிப்பதால் தான்'''. பாலி, பொலி - இரண்டுமே தமிழ் ஒலி மரபுக்கு ஏற்ப இருக்கும்போது அவற்றில் சரியானதை தேர்ந்து எழுதுவது தானே முறை? ஒரு வேளை பாலி - தமிழ் ஒலி மரபுக்கு ஏற்பில்லாததாகவும், பொலி - தமிழ் ஒலி மரபுக்கு ஏற்புடையதாகவும் இருந்தால், நிச்சயம் பொலி என்று தான் எழுத வேண்டும்.
 
ஸ்ரீநிவாசனின் கருத்துக்கள் குறித்து நற்கீரன் தெரிவித்திருப்பது சரியான புரிதலே. முதலில் எழுதியவரின் எழுத்துக்கூட்டலுக்கு மதிப்பளிப்பது என்பது அது சரியாக இருக்கும் பட்சத்தில் தான். தவறான ஒரு எழுத்துக்கூட்டலை அது முதலில் எழுதப்பட்டது என்பதற்காக எப்படி அனுமதிக்க முடியும்? poly என்பதற்கு பொலி என்ற உச்சரிப்பை எந்த ஆங்கில அகராதியிலும் நான் கண்டதில்லை. கோபி, தயவு செய்து இதை பெரும்பான்மை - சிறுபான்மை வழக்காக கருத வேண்டாம். இலங்கை வழக்கு சரியாக இருக்கும் தருணங்களில் அதை மறுத்து நாம் என்றேனும் தமிழ் விக்கியில் செயல்பட்டதுண்டா? எழுத்துத் தமிழில் சீர்மை கொள்வது தமிழின் எதிர்காலத்துக்கு நன்று. தமிழ்நாட்டிலேயே எண்ணற்ற வட்டார வழக்குகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஆங்கில, தமிழ்ச் சொற்களின் பலுக்கல் வேறுபடும். அவற்றை நாம் பொதுத் தமிழில் நாம் கொண்டு வருவதில்லையே?--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 07:05, 30 ஜனவரி 2007 (UTC)
 
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பொதுவான_குறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது