சாலுமரத திம்மக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"{{underconstruction}} திம்மக்கா (கன்னட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் லாசு ஏஞ்சல்சு மற்றும் கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு சுற்றுச்சூழல் கல்விக்கான திம்மக்காவின் மூலங்கள் என இவரது பெயரில் செயல்படுகிறது.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
திம்மக்கா கர்நாடக மாநிலத்தின் ஊர்ப்புறம் ஒன்றில் பிறந்தவர். கூதுர் எனும் ஊரினரான சிக்கையா என்பவரை மணமுடித்து அந்த ஊருக்கு இடம் பெயர்ந்தார் திம்மக்கா. திருமணமாகிப் பல வருடங்களாகியும் மக்கட்பேறு கிடைக்காததால் திம்மக்கா பொட்டல் காடாக இருந்த கூதூர்ச் சாலைகளின் இரு மருங்கிலும் ஆலமரக் கன்றுகளை நடத்துவங்கியதாய்க் கூறப்படுகிறது.
 
== சாதனைகள் ==
திம்மக்காவின் இப்பணிக்கு அவர் கணவரும் உதவ முதல் வருடத்தில் பத்து மரங்கள், இரண்டாமாண்டில் 15, மூன்றாமாண்டில் 20 எனத் தொடங்கிய அரும்பணி 284 மரங்கள் வரை தொடர்ந்தது. இவற்றின் மதிப்பு 1.5 மில்லியன் உரூயாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இம் மரங்களைப் பராமரிக்கும் பொறுப்பைத் தற்போது கருநாடக அரசே ஏற்றுக் கொண்டு விட்டது. தற்போது திம்மக்கா சாலையின் இருமருங்கிலும் மரம்நட்டவர் எனும் பொருள்பட கன்னடத்தில் சால மருத எனும் அடைமொழியோடு சாலமருத திம்மக்கா என அறியப்படுகிறார்.
 
== விருதுகள் ==
இந்திய அரசின் தேசியக் குடிமகன் விருது -1995
ஹம்பி பல்கலைக்கழகம் வழங்கிய நடோஜா விருது - 2010
வரிசை 17:
வாழும் கலை அமைப்பு வழங்கிய விசாலாட்சி விருது
 
== தற்போதைய செயல்பாடுகள் ==
திம்மக்காவின் கணவர் 1991 இல் இயற்கை எய்தினார். திம்மக்கா இந்தியாவின் பல மரம் நடும் அமைப்புளால் அழைக்கப்படுகிறார். தனது சிற்றூரில் ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது அவரது கனவாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சாலுமரத_திம்மக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது