திருவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி உரைதிருத்தம் - விக்கியாக்கம் - குறுந்தகடு
வரிசை 19:
புனித கிளமெண்ட், அக்காலக் கிறித்தவர்கள் ஆவணங்களில் அடையாளம் இடப் பயன்படுத்திய முத்திரை மோதிரங்களில் கிறித்தவ அடையாளங்களாக புறா, மீன், புயலை எதிர்த்துச் செல்லும் கப்பல், யாழ், நங்கூரம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்றார். சிலைகளின் சாயல் ஏற்கத்தக்கனவல்ல, ஏனென்றால் கடவுளுக்குச் சிலை எழுப்புவது யூத மரபுப்படி தடைசெய்யப்பட்டிருந்தது. வாள், வில் போன்ற அடையாளங்கள் தடைசெய்யப்பட்டன, ஏனென்றால் கிறித்தவர்கள் வன்முறையில் ஈடுபடலாகாது. மதுக்கிண்ணம் அடையாளமும் கிறித்தவர்களுக்கு உகந்ததல்ல.<ref>St. Clement of Alexandria, ''The Pedagogue'', 3.59.2-3.60</ref>
 
மேலே குறிப்பிட்ட எல்லா அடையாளங்களும் புற சமயமாகிய கிரேக்க-உரோமைச் சமயத்தில் வழக்கத்தில் இருந்தவை. [[கிறித்தவம்]] அந்த அடையாளங்களில் சிலவற்றை ஏற்றுத் தன் கொள்கைக்கு ஏற்பத் தழுவியமைத்துக் கொண்டது. ஹெர்மஸ்[[ஹெர்மீஸ்]] என்னும் கிரேக்க கடவுளின் அடையாளமாகிய "நல்ல ஆயர்" (''ஆடு சுமப்பவர்'') உருவகம் [[இயேசு|இயேசுவுக்குப்]] பொருத்தி உரைக்கப்பட்டது
 
==திருவோவிய வரலாறு==
 
திருவோவியத்தைக் குறிக்கின்ற eikōn என்னும் கிரேக்கச் சொல் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] சாயல், உருவம் என்னும் பொருளில் வந்தாலும், "நிறங்களால் எழுதப்படும் ஓவியம்" என்னும் பொருளில் வரவில்லை. உரோமையில் தொமித்தில்லா, கலிஸ்டஸ் ஆகிய சுரங்கக் கல்ல்றைகளில்கல்லறைகளில் பல நிறங்களில் எழுதப்பட்ட பண்டைய ஓவியங்கள் இன்றும் உள்ளன.
 
கிறித்தவத்துக்கு முந்திய சமயப் பாணியிலும் [[ஞானக் கொள்கை]] என்னும் கோட்பாட்டுப் பின்னணியிலும் உருவான திருவோவிய வரலாறு உள்ளது. கிபி நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த ஏலியஸ் லம்ப்ரீடியஸ் (Aelius Lampridius) என்பவர் அலெக்சாண்டர் செவேருஸ் (கிபி 222-235) என்னும் மன்னர் கிறித்தவராக இல்லாமலிருந்தாலும், தம் வீட்டில் ஒரு சிறு கோவில் வைத்திருந்ததாகவும் அதில் தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்ட உரோமைப் பேரரசர்களின் சாயல்களையும், தன் முன்னோரின் சாயல்களையும், இயேசு கிறித்து, அப்போல்லோனியஸ், ஓர்ஃபேயஸ், ஆபிரகாம் போன்றோரின் படங்களை வைத்திருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.<ref>Aelius Lampridius, ''Life of Alexander Severus'' (xxxix)</ref>
 
பண்டைய கிறித்தவ அறிஞர் இரனேயஸ் (கிபி சுமார் 130-202), [[ஞானக் கொள்கை|ஞானக் கொள்கையினர்]] என்போர் [[இயேசு|இயேசுவுக்குக்]] கொலைத் தண்டனை விதித்த பிலாத்து இயேசுவின் சாயலை வரைந்ததாகவும், அவர்கள் அச்சாயலோடு கிரேக்க அறிஞர்களான பித்தாகோராசு[[பித்தாகரஸ்]], [[பிளேட்டோ]], [[அரிஸ்டாட்டில்]] போன்றோரின் படங்களையும் வணங்கியதாகக் கூறியதாகவும் இகழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார்.<ref>St. Irenaeus, ''On the Detection and Overthrow of the So-Called Gnosis'' 1:25;6</ref>
[[Image:Ushakov Nerukotvorniy.jpg|thumb|left|200px|''மீட்பர் இயேசுவின் திருவோவியம்.'' - "கையால் செய்யப்படாத சாயல்" - மரபுவழி திருச்சபைப் பாணி. எழுதியவர்: சீமோன் உஷாக்கோவ். காலம்: 1658.]]
 
பிலாத்து இயேசுவின் உருவத்தை ஓவியமாக வரைந்தார் என்னும் கதை தவிர, வேறொரு நிகழ்ச்சியை நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த செசரியா நகர் யூசேபியஸ் என்னும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எதேஸ்ஸா நகர் அரசர் ஆப்கார் (King Abgar of Edessa), நோய்வாய்ப்பட்ட தம் மகனைக் குணப்படுத்த இயேசு வரவேண்டும் என்று மடல் அனுப்பினாராம். இக்கதையில் இயேசுவின் உருவச் சாயல் குறிப்பிடப்படவில்லை. ஆனால் "ஆதாய் கொள்கை" (''Doctrine of Addai'') என்னும் சிரிய மொழி ஏட்டில் இயேசுவின் திருவுருவச் சாயல் குறிப்பிடப்படுகிறது. சிறிது பிற்பட்ட காலத்தில் எவாக்ரியுஸ் (''Evagrius'') என்பவர் தரும் குறிப்பின்படி, இயேசு சிலுவை சுமந்து சென்றபோது தம் முகத்தை ஒரு துணியால் துடைத்தபோது அத்துணியில் அவருடைய சாயல் பதிந்த வரலாறு வருகிறது.<ref>''Veronica and her Cloth'', Kuryluk, Ewa, Basil Blackwell, Cambridge, 1991</ref>இயேசுவின் சாயல் அதிசயமாகப் பதிந்த அத்துணி எதேஸ்ஸா நகரில் 10ஆம் நூற்றாண்டுவரை இருந்ததாகவும், பின் [[காண்ஸ்டாண்டிநோபுள்|காண்ஸ்டாண்டிநோபுளுக்குச்]] சென்றதாகவும், 1204இல் [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர் வீரர்கள்]] காண்ஸ்டாண்டிநோபுளைத் தாக்கியபோது அதுஅத்துணி காணாமற்போனதாகவும், அச்சாயலின் பிரதிகள் பல உருவாக்கப்பட்டதாகவும் வரலாறு எழுந்தது.
 
மேலும், யூசேபியஸ் "திருச்சபை வரலாறு" என்னும் தம் நூலில், [[இயேசு]], [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]], [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] ஆகியோரின் ஓவியங்களைப் பார்த்ததாகவும், செசரியாவில் பான் (''Pan'') என்னும் கிரேக்க கடவுளின் வெண்கலச் சிலை இருந்ததாகவும், சிலர் அச்சிலை இயேசுவின் சாயல் என்று கூறியதாகவும் எழுதுகிறார். பான் சிலைத் தொகுதியில் இரட்டைப் போர்வை அணிந்த ஒருவர் நின்றுகொண்டு தம் கைகளை நீட்டிய நிலையில் இருந்தார் எனவும் அவர்முன் ஒரு பெண் முழந்தாட்படியிட்டு இருந்ததாகவும் அப்பெண்ணே லூக்கா நற்செய்தியில் (லூக் 8:43-48) வருகின்ற நோய்வாய்ப்பட்ட பெண் என்று மக்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.<ref>Eusebius of Caesarea, ''Church History'' 7:18</ref>
 
ஒருசில அறிஞர் கருத்துப்படி, மேற்கூறிய ஓவியம் அடையாளம் தெரியாத ஒரு கிரேக்கக் கடவுளின் சாயலாக இருக்கலாம். அல்லது அது கிரேக்க கலாச்சாரத்தில் "நலம் கொணரும் கடவுள்" என்று அறியப்பட்ட "எஸ்குலாப்பியுஸ்" (Aesculapius) என்பவரின் உருவாக இருக்கலாம். மன்னன் ஹேட்ரியன் காலத்தில் வெளியான நாணயங்களில் தாடியோடு ஹேட்ரியன் மன்னன் இருக்கிறார். அவருக்கு முன்னிலையில் ஒரு பெண் முழந்தாட்படியிட்டு நிற்கிறார். ஒரு குறிப்பிட்ட மாநிலம் அரசனுக்குப் பணிந்து வணக்கம் செலுத்தும் பொருளில் அந்த நாணய உருவம் உள்ளது.
வரிசை 85:
மார்கரீத்தா குவார்தூச்சி (Margherita Guarducci) என்னும் தொல்பொருள் ஆய்வாளர், மேலே குறிக்கப்பட்ட "இறைவனின் அன்னை" திருவோவியம் வட்ட வடிவில் இருந்தது என்றும், அதில் [[மரியா (இயேசுவின் தாய்)|அன்னை மரியாவின்]] முகம் மட்டுமே வரையப்பட்டிருந்தது என்றும் ஒரு மரபு உள்ளதைக் குறிப்பிடுகிறார். அத்திருவோவியம் [[காண்ஸ்டாண்டிநோபுள்|காண்ஸ்டாண்டிநோபுளை]] வந்தடைந்ததும், அங்கு மரியா தம் குழந்தை இயேசுவைக் கைகளில் தாங்கியிருப்பதுபோல் வரையப்பட்டிருந்த பெரிய நீள்சதுர ஓவியத்தில் மரியாவின் முகமாகப் பொருத்தப்பட்டது என்றும், இவ்வாறு உருவான கூட்டுத் திருவோவியமே பிற்காலத்தில் Hodegetria ([இயேசுவிடம் செல்ல] "வழிகாட்டுபவர்") என்னும் பெயர் கொண்ட அன்னையின் திருவோவியமாக வணங்கப்படலாயிற்று என்றும் அம்மரபு கூறுகிறது.
 
அறிஞர் குவார்தூச்சி இன்னொரு மரபையும் குறிப்பிட்டுள்ளார். கிபி 1261இல் [[காண்ஸ்டாண்டிநோபுள்|காண்ஸ்டாண்டிநோபுளின்]] கடைசி மன்னர் இரண்டாம் பால்ட்வின் அந்நகரை விட்டுச் சென்றபோது மேற்கூறிய [[மரியா (இயேசுவின் தாய்)|மரியாவின்]] கூட்டுத் திருவோவியத்தின் வட்டவடிவிலான முகப்பகுதியை மட்டும் தம்மோடு எடுத்துச் சென்றாராம். அது அங்கேவின் (Angevin) என்னும் அரச குடும்பத்தின் உடைமையாக இருந்ததாம். பின்னர், காண்ஸ்டாண்டிநோபுளில் நிகழ்ந்ததுபோல மீண்டும் ஒருமுறை, மரியா தம் குழந்தை இயேசுவைக் கைகளில் தாங்கியிருப்பதுபோல் வரையப்பட்டிருந்த பெரிய நீள்சதுர ஓவியத்தில் மரியாவின் முகமாகப் பொருத்தப்பட்டதாம். இவ்வாறு உருவான கூட்டுத் திருவோவியம் "மோந்தேவேர்ஜினே" (Montevergine) என்னும் இத்தாலிய நகரில் அமைந்துள்ள அன்னை மரியாவின் பெருங்கோவிலில்<ref>[http://en.wikipedia.org/wiki/Montevergine மோந்தேவேர்ஜினே மரியா கோவில்]</ref> மக்களால் பக்தியுடன் வணங்கப்பட்டு வருகிறது<ref>[http://www.avellinomagazine.it/foto%20home%20page/madonna.jpg AvellinoMagazine.it]</ref><ref>[http://www.mariadinazareth.it/www2005/Apparizioni/Montevergine4.jpg Mariadinazareth.it]</ref>
 
மோந்தேவேர்ஜினே கோவிலில் உள்ள திருவோவியம் கடந்த நூற்றாண்டுகளில் பலமுறை மீண்டும் மீண்டும் வரையப்பட்டதால், [[லூக்கா நற்செய்தி|புனித லூக்காவால்]] வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற மரியாவின் முகத்தின் அசல் தோற்றம் எவ்வாறு இருந்தது என்பதை வரையறுக்க இயலவில்லை.
வரிசை 180:
கிரேக்க நாட்டில் ஒரு கலவரமே வெடித்தது. இதை அரச படைகள் 727இல் வன்முறையால் அடக்கின. 730இல் காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவர் முதலாம் ஜெர்மானோஸ் திருவோவிய எதிர்ப்பு ஆணையை ஏற்க மறுத்து பதவி துறந்தார். பேரரசர் லியோ தமக்கு ஆதரவான அனஸ்தாசியோஸ் என்பவரை அந்த பதவிக்கு நியமனம் செய்தார். இவ்வாறு, தலைநகரான காண்ஸ்டாண்டிநோபுளில் திருவோவிய உடைப்புக்கு எதிராக எழுந்த கலவரம் அடக்கப்பட்டது.<ref>Treadgold. ''History of the Byzantine State'', p. 353.</ref>
 
பிசான்சிய (உரோமை) பேரரசின் கீழ் இருந்த இத்தாலிய தீபகற்பத்தில் [[இரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் கிரகோரியும்]] அவருக்குப் பின் [[மூன்றாம்திருத்தந்தை கிரகோரி (திருத்தந்தை)|மூன்றாம் கிரகோரியும்]] அரச ஆணையைக் கடுமையாக எதிர்த்தார்கள். திருத்தந்தை இரண்டாம் கிரகோரி உரோமையில் சங்கம் கூட்டி, திருவோவிய உடைப்பாளர்களைச் சபைநீக்கம் செய்தார்.
 
இதற்கு எதிர்ப்பாக பேரரசர் லியோ தென் இத்தாலியையும் இல்லீரிக்கம் பகுதியையும் உரோமை மறைமாவட்டத்திலிருந்து பிரித்து, காண்ஸ்டாண்டிநோபுள் மறைமாவட்டத்தின் கீழ் இடம் மாற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/திருவோவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது