"தட்டாரப்பூச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,057 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
→‎வாழ்முறை: விரிவு
(→‎வாழ்முறை: விரிவு)
(→‎வாழ்முறை: விரிவு)
 
== வாழ்முறை ==
பெண் தட்டாம்பூச்சி தன்னுடைய சில நூறு முதல் சில ஆயிரம் முட்டைகளை நீரிலோ, நீரருகே உள்ள மண்ணிலோ, நீர்ச்செடிகளிலோ இடுகின்றன. இவை வெப்ப நாடுகளில் சில நாட்கள் முதல் (5-15 நாள்கள் முதல்) ஒரு மாத அளவிலே பொரிக்கும். குளிர் நாடுகளில் இரண்டு மாதம் முதல் 7 மாதங்கள் வரை கூட ஆகலாம்<ref>K.A.Subramanian (2005) Dragonflies and Damselflies of Peninsular India-A Field Guide. E-Book of Project Lifescape. Centre for Ecological Sciences, Indian Institue of Science and Indian Academy of Sciences, Bangalore, India. 118 pages </ref>.. அந்த முட்டைகளில் இருந்து பிறக்கும் இளவுயிரி தட்டான் நீருக்குள்ளேயே தன் வாழ்க்கையை ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை வாழும். அப்பொழுது அதற்கு இறக்கைகள் இருக்கா. iஇத நிலையிலும் இவற்றுக்கு நல்ல கண்பார்வை உண்டு, பெரிய கீழ்வாய்த் தாடை உண்டு. இவ் இளவுயிரிகள் செவுள் கள் மூலம் மூச்சுவிடுகின்றன. இவ் இளவுயிரிகள் நிறைய நீர்வாழ் உயிரினங்களை உண்ணும். தன் நீர்வாழ் நாள்களில் இவை 10-15முறை புறத்தோல்களைக் களையும். கடைசி தோலுரிப்பின் பின் நீரில் இருந்து வெளிப்பட்டு பறக்கத் தொடங்குகின்றது. முழு வளர்ச்சி அடைந்து, பறக்கும் தட்டானாக ஆன பின்பு, அது சில கிழமைகளோ (வாரங்களோ) அல்லது ஓரிரண்டு மாதங்களோதான் உயிர்வாழ்கின்றன. முழு வளர்ச்சி அடைந்து பறக்கும் தட்டான் பறந்து கொண்டே கொசு போன்ற சிறு பறக்கும் பூச்சிகளை உண்ணும். பறக்கும் பொழுது தன் ஆறு கால்களையும் ஒரு சிறு கூடை போல் வைத்துக்கொண்டு பறக்கும். அப்பொழுது அதில் மாட்டும் பூச்சிகளையும் உண்ணும். இவற்றின் கண்பார்வை, அசையாது இருக்கும் பொருளை, ஏறத்தாழ 2 மீட்டர் தொலைவில் காணக்கூடியதாகும், ஆனால் நகரும் பொருளாயின் அதைப்போல் 2-3 மடங்கு தொலைவில் உள்ளதைப் பார்க்க இயலும். <ref>World Book Encylopedia, 1985 Edition</ref>,
x
 
== உசாத்துணை ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/987405" இருந்து மீள்விக்கப்பட்டது