மின்னூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ தி
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:min_pulam_selva.jpg|thumb|300px|நேர்மின்மத்திற்கும் எதிர்மின்மத்திற்கும் இடையே உள்ள மின்புலம் காட்டப்பட்டுள்ளது. மின்புலமானது தன் விசையை நேர்மின்மத்தில் தொடங்கி எதிர்மின்மத்தில் முற்றுப்பெறுவதாகக் கொள்ளுவது மரபு. [[மின்புலம்]] அதிகமாக உள்ள பகுதியை மஞ்சள் நிறத்தில் காணலாம். ஒரு மின்மத்தைச் சூழ்ந்து எல்லாப் புறமும் மின்புலம் உண்டு ]]
'''மின்மம்''' என்பது ஒரு பொருளைச் சுற்றி ஒருவகையான விசைப்புலம் தோற்றுவிக்கும் அடிப்படையான ஒன்றாகும். இவ்விசைப் புலத்தை [[மின்புலம்]] என்பர். இம் மின்மமானது அடிப்படையில் [[அணு]]வின் உட்கூறுகளில் ''இயல்பாகவே'' இருப்பதாகும். எல்லாப்பொருளும் அணுக்களால் ஆனவை. [[ஐதரசன்]] அணுவைத் தவிர்த்த மற்ற எல்லா அணுக்களும் மூன்றே மூன்று வகையான '''துகள்'''களால் ஆக்கப்பட்டவைதாம். இங்கு துகள் எனப்படுவது அணுவின் உட்கூறு ஆகும். ஐதரசனில் மட்டும் இரண்டே இரண்டு வகையான துகள்கள் தாம் உள்ளன. ஓர் அணுவில் உள்ள இந்த மூன்று வகைத் துகள்களில் இரண்டு வகைத் துகள்களானவை, இரு வேறு வகை மின்மம் கொண்டவை. ஒருவகை, அணுவின் கருவில் உள்ளது. இதனை [[நேர்மின்னி]] என்பர். இந்த நேர்மின்னி தன்னகத்தே இயல்பாகக் கொண்டிருக்கும் இவ் வகையான மின்மத்தை ''நேர்மின்மம்'' என்பர். இதனை கூட்டல் குறி (<big>''' +'''</big> ) இட்டுக் காட்டுவர். மற்றொரு வகைத் துகள் அணுக்கருவைச் சுற்றிப் பல்வேறு சுற்றுப் பாதைகளில் உலாவருவன. இவைகளை [[எதிர்மின்னி|எதிர்மின்னிகள்]] என்பர். இவ் எதிர்மின்னிகள் தன்னியல்பாய்க் கொண்டிருக்கும் மின்மத்தை ''எதிர்மின்மம்'' என்பர். இதனைக் கழித்தல் குறி (<big> '''-''' </big>) இட்டுக் காட்டுவர். எனவே அணுக்கருவில் உள்ள நேர்மின்னியின் நேர்மின்மப் பரும அளவும், அணுக்கருவைச் சுற்றி உலா வரும் எதிர்மின்னியின் எதிர்மின்மப் பரும அளவும் ஒன்றே ஆகும், ஆனால் அவை எதிர்-எதிர் இயல்பு (வகை) கொண்டவை. எதிரெதிர் இயல்பு கொண்ட மின்மங்கள் ஒன்றை ஒன்று ''ஈர்க்கும்'' பண்பு கொண்டவை. இதனிடையே'' ஈர்ப்பு விசை'' இருக்கும். ஒரே வகை மின்மம் கொண்ட பொருட்கள் ஒன்றை ஒன்று உந்தி விலக்கும் பண்பு கொண்டவை. இவையிடையே ''விலகுவிசை'' இருக்கும். மின்மத்தால் வினைப்படும் விசைக்கு ''கூலாம் விசை'' என்பர். (கூலாம் என்பது மின்மத்தைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடியான [[பிரான்சு|பிரான்சிய]] அறிவியலாளர் ஒருவரின் பெயர். (பார்க்க: [[சார்லஸ்கூலாம்|சார்லசு அகஸ்டின்அகசிட்டின் டெ கூலாம்]]) இவைகளைப் படத்தில் காணலாம்.
[[படிமம்:forces_on_charges_Selva.jpg|thumb|300px|மின்மங்களுக்கு இடையே நிலவும் விசை வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. படம் ('''அ'''): இரு நேர்மின்மங்களுக்கு இடையே நிலவும்''' விலகு விசை'''யைக் காட்டுகின்றது. படம் ('''ஆ'''): இரு ''எதிர்மின்மங்களுக்கு'' இடையே நிலவும் விலகுவிசையைக் காட்டுகின்றது. படம் ('''இ'''): மாறுவகையான மின்மங்களுக்கு இடையே நிலவும் '''ஈர்ப்புவிசை'''யைக் காட்டுகின்றது]] மேலும் ஐதரசனைத் தவிர மற்ற எல்லா வகை அணுவின் கருவினுள்ளேயும் மின்மம் ஏதும் இல்லா ஒருவகைத் துகளும் உண்டு அதற்கு நொதுமின்னி அல்லது [[நொதுமி]] என்று பெயர். நொது என்னும் சொல் ''எப்பக்கமும் சேராப் பொது'' என்று பொருள் படும். மின்மம் ஏதுமில்லாததால் நொதுமிகள் மின்மத்தால் எவ்விசைக்கும் உட்படாது. மின்மம் உடைய ஒரு பொருளானது மின்மம் உள்ள மற்றொரு பொருளைத்தான் தன் மின்புலத்தால் விசைக்குள்ளாக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மின்னூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது