அஞ்சல் பெட்டி 520

டி. என். பாலு இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அஞ்சல் பெட்டி 520 (Anjal Petti 520) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இத்திரைப்படத்திற்கு ஆர். கோவர்த்தனம் இசையமைத்தார்.[2][3]

அஞ்சல் பெட்டி 520
இயக்கம்டி. என். பாலு
தயாரிப்புவாசுதேவ மேனன்
பாரத் மூவீஸ்
இசைஆர். கோவர்தனம்
நடிப்புசிவாஜி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுசூன் 27, 1969
நீளம்4359 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

பிரபு மதுரையை தலைமையிடமாகக் கொண்ட குழந்தை உணவு நிறுவனத்தின் சென்னை மேலாளராக உள்ளார். அவர் மிகவும் திறமையான மேலாளர் மற்றும் அவரது நிர்வாக இயக்குநர், பொது மேலாளர் பதவிக்கு பிரபுவை உறுதி செய்கிறார். திடீரென பிரபுவுக்கு, அவரது எம்.டி பதவி உயர்வு தரவில்லை எனத் தகவல் கிடைக்கிறது.இதைக் கேட்டு, பிரபு கோபமடைந்து, தனது நிறுவன எம்.டியை தவறாகப் பேசி ராஜினாமா கடிதம் எழுதுகிறார். அவர் கடிதத்தை அஞ்சல் பெட்டி 520 இல் போட்டு விடுகிறார். அடுத்த நாள் பிரபுவுக்கு, அதிகாரியிடமிருந்து பதவி உயர்வுக்கான தகவலோடு தந்தி வருகிறது. உடனே, பிரபு தனது தவறை உணர்ந்து, அவர் தபால் பெட்டி 520 க்கு அனுப்பிய கடிதத்தை திரும்பப் பெறத் தயாராகிறார். அங்கு விறுவிறுப்பான கதை தொடங்குகிறது. அவர் கடிதத்தைத் துரத்துகிறார். வில்லன்களின் சதியால் குழப்பமடைகிறார். இறுதியாக அவர் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் வெளியே வருகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. Ashok, A. V. (2002-07-19). "Incredible charisma on screen". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210423155852/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/incredible-charisma-on-screen/article28571251.ece. 
  2. "121-130". nadigarthilagam.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2014-09-11.
  3. "அஞ்சல் பெட்டி 520". கல்கி. 6 July 1969. p. 62. Archived from the original on 21 September 2021. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சல்_பெட்டி_520&oldid=3852500" இலிருந்து மீள்விக்கப்பட்டது