அண்டிலியா (கட்டிடம்)

அண்டிலியா (Antilia), என்பது இந்தியாவின் மும்பை நகரத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் வதிவிட வளாகமாகும். இது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் மேலாண்மை இயக்குனர் முகேசு அம்பானி அவர்களிற்குச் சொந்தமானது. இது உலகின் மிக விலை உயர்ந்த வீடாகக் கருதப்படுகின்றது. இதனைப் பராமரிக்க மட்டும் அறுநூறு முழுநேரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் 2014 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்தது.[2]

அண்டிலியா
பளுகாட் சாலையில் (Balughat Road) இருந்தான அண்டிலியாவின் தோற்றம்
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
வகைவதிவிடம்
இடம்ஆல்டமௌண்ட் சாலை (Altamount Road), ஆப் பெட்டர் சாலை (off. Pedder Road), தெற்கு மும்பை
கட்டுமான ஆரம்பம்2006
நிறைவுற்றது2010
திறப்பு5 February
செலவுஅதிகாரப்பூர்வமாக $50-70m[2]
உரிமையாளர்முகேசு அம்பானி
உயரம்570 அடி (170 m)[1]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை27[1]
தளப்பரப்பு400,000 sq ft (37,000 m2)
உயர்த்திகள்11
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)பெர்கின்ஸ் + வில் (Perkins + Will)
அமைப்புப் பொறியாளர்ஸ்டெர்லிங் இன்ஜினியரிங் கன்சல்டன்சி (தனியார்) வரையறுக்கப்பட்டது (Sterling Engineering Consultancy Pvt. Ltd.)
முதன்மை ஒப்பந்தகாரர்லெய்டன் ஹோல்டிங்க்ஸ் (Leighton Holdings)

அண்டிலியா என்ற பெயர் வரக்காரணம் தொகு

15 ஆம் நூற்றாண்டு காலத்தில், அத்திலாந்திக்குப் பெருங்கடல்ப் பகுதியில், மேற்குப் போர்த்துக்கல்லுக்கும் ஸ்பெயினிற்கும் தொலைவில் அமைந்திருந்து மறைந்து போனது என நம்பப்படும் அண்டிலியா என்ற ஒரு கற்பனைத் தீவின் பெயரே முகேசு அம்பானியின் இந்த 570 அடி உயரமுடைய 27 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி வீட்டிற்குச் சூட்டப்பட்டுள்ளது.

கட்டுமானம் தொகு

அண்டிலியாவின் கட்டிடகலை வடிவமைப்பானது சிகாகோவை தளமாக கொண்டு இயங்கும் பெர்கின்ஸ்+வில் கட்டிடகலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டதுடன் அண்டிலியாவின் கட்டமைப்பு சார்ந்த வடிவமைப்பானது மும்பையைச் சேர்ந்த ஸ்டெர்லிங் இன்ஜினியரிங் கன்சல்டன்சி வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தால் வடிவமைப்புச் செய்யப்பட்டது. இதனை அவுஸ்திரேலியாவினைத் தளமாகக் கொண்டு இயங்கும் லெய்டன் ஹோல்டிங்க்ஸ் கட்டுமான நிறுவனத்தினர் நிர்மாணித்துக் கொடுத்தனர்.

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 Reeba Zachariah. "Residence Antilia, Mumbai, India". Emporis.com. http://www.emporis.com/building/residence-antilia-mumbai-india. பார்த்த நாள்: 16 August 2014. 
  2. 2.0 2.1 "Mukesh Ambani's Antilia rated world's most outrageously expensive property". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 16 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டிலியா_(கட்டிடம்)&oldid=3522269" இலிருந்து மீள்விக்கப்பட்டது