அதனா (Adana, pronounced [aˈda.na]; ஆர்மீனியம்: Ադանա; பண்டைக் கிரேக்கம்Άδανα) தெற்கு துருக்கியிலிலுள்ள முதன்மையான நகரம். இந்த நகரம் தென்மத்திய அனத்தோலியாவில் செய்கன் ஆற்றங்கரையில் நடுநிலக் கடலிலிருந்து 35 கிமீ (22 மை) தொலைவில் உள்நாட்டில் அமைந்துள்ளது. அதனா மாகாணத்தின் நிர்வாகத் தலைநகரமாகவுள்ள அதனாவின் மக்கள்தொகை 1.7 மில்லியன்.[2] இது துருக்கியின் 5வது மிகுந்த மக்கள்தொகையுள்ள நகரமாக விளங்குகிறது. அதனா-மெர்சின் பன்மையப் பெருநகர் பகுதியின் மக்கள்தொகை 3 மில்லியன் ஆகும். அதனா, மெர்சின்,டார்சசு நகரங்களை உள்ளடக்கிய இந்த பெருநகரப் பகுதி கிழக்கு-மேற்காக 70 கிமீ (43 மை) அகலமும் வடக்கு-தெற்காக 25 கிமீ (16 மை) நீளமும் கொண்டுள்ளது.

அதனா
பெருநகர நகராட்சி
மேலே: சுகுரோவாவிலிருந்து காட்சி, முதல் இடது: அதனா தொடருந்து நிலையம், முதல் வலது:டாஸ்கோப்ரூ, 2வது இடது: செராட்டன் அதனா, 2வது வலது: சபான்சி நடுவப் பள்ளிவாசல், கீழே: புறநகர் வெள்ளை இல்லங்கள்.
மேலே: சுகுரோவாவிலிருந்து காட்சி, முதல் இடது: அதனா தொடருந்து நிலையம், முதல் வலது:டாஸ்கோப்ரூ, 2வது இடது: செராட்டன் அதனா, 2வது வலது: சபான்சி நடுவப் பள்ளிவாசல், கீழே: புறநகர் வெள்ளை இல்லங்கள்.
அதனா is located in துருக்கி
அதனா
அதனா
அதனாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 37°0′N 35°19.28′E / 37.000°N 35.32133°E / 37.000; 35.32133
நாடு துருக்கி
வலயம்நடுநிலக் கடல் வலயம்
மாகாணம்அதனா
நிறுவல்பொ.யு.மு 6000 (8024 ஆண்டுகள் முன்பு)
ஒருங்கிணைக்கப்பட்டது1871 (153 ஆண்டுகள் முன்பு)
மாவட்டங்கள்செய்கன், யுரெகிர், சுகுரோவா, சரிசம்
அரசு
 • வகைமேயர்-மன்றம் அரசு
 • நிர்வாகம்அதனா பெருநகர நகராட்சி
 • மேயர்உசையின் சோசுலு (தேசிய இயக்கக் கட்சி)
பரப்பளவு
 • மொத்தம்1,945 km2 (751 sq mi)
ஏற்றம்23 m (75 ft)
மக்கள்தொகை (2017)[1]17,53,337
 • அடர்த்தி892.83/km2 (2,312.4/sq mi)
நேர வலயம்தொலைகிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு01xxx
தொலைபேசி குறியீடு0322
தானுந்து எண்பலகை01
இணையதளம்www.adana.bel.tr
www.adana.gov.tr

அதனா சிலிசியா எனப்படும் புவி-பண்பாட்டு வலயத்தின் மையத்தில் உள்ளது; இப்பகுதி தற்போது சுகுரோவா என அறியப்படுகின்றது. ஆறு மில்லியன் மக்கள் வாழும்,[2] சிலிசியா துருக்கியின் மிகப்பெரும் மக்களடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். சமவெளியான, வண்டல் பூமியாதலால் வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகின்றது. இப்பகுதியில் அதனா மாகாணம், மெர்சின் மாகாணம், ஓசுமானியெ மாகாணம், அதாய் மாகாணங்கள் அடங்கியுள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Archived copy". Archived from the original on 4 February 2016. பார்க்கப்பட்ட நாள் 1 February 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. 2.0 2.1 "Archived copy". Archived from the original on 4 February 2016. பார்க்கப்பட்ட நாள் 1 January 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அதனா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதனா&oldid=3585905" இலிருந்து மீள்விக்கப்பட்டது