அதி உயர் அதிர்வெண்

அதியுயர் அதிர்வெண் (VHF)
அதிர்வெண் (சுற்றுகள்/செக்): 30 MHz இலிருந்து 300 MHz வரை

அலைநீளம்: 10 மீட்டர் இல் இருந்து 1 மீட்டர் வரை

அதியுயர் அதிர்வெண் (அல்லது அதியுயர் மீடிறன், Very high frequency) என்பது 30 தொடக்கம் 300 மெகா ஹேட்ஸ் அலைவரிசை அதிர்வெண்களைக் குறிக்கும். இதற்குக் கீழே உள்ள அலைவரிசைகள் உயர் அதிர்வெண்ணாகும். மேலேயுள்ள அலைவரிசைகள் மிகை அதியுயர் அதிர்வெண்ணாகும்.[1]

பொதுவாக பண்பலை வரிசை அல்லது FM என்றவாறழைக்கப்படும் வானொலி (ரேடியோ) 88-108 மெகா ஹேட்ஸ் அலைவரிசையிலேயே ஒலிபரப்பப்படுகின்றது. தவிர தொலைக்காட்சி (TV) பண்பலைவரிசையுடன் மிகை அதிஉயர் அதிர்வெண் ஊடாக பல்லூடக (ஒலி/ஒளி) பரப்புச் செய்யப்படுகின்றது. அதியுயர் அதிர்வெண்ணானது கடற் போக்குவரத்து, விமானத் தொலைத் தொடர்பாடல் மற்றும் ஐக்கிய நாடுகள் மற்றும் பல்வேறு மனிதநேய அமைப்புக்களின் தொலைத் தொடர்பாடலிற்கும் பயன்படுகின்றது.

அதியுயர் அதிர்வெண்ணானது குறைந்த தூரப் பகுதிகளுக்கே பொருத்தமானது. இதன் வீச்சானது பார்க்கக் கூடிய தூரத்திலும் (Line of sight) சற்றே கூடுதானது. உயர் அதிர்வெண்ணைப் போன்று வளிமண்டலத்தில் உள்ள அயன மண்டலம் இதைத் தெறித்து மீண்டும் பூமிக்கு அனுப்பாது. எனவே இதன் வீச்சானது உள்ளூர்ப் பிரதேசத்திலேயே இருப்பதோடு பல்லாயிரக்கணக்கான தூரத்தில் உள்ள பிறிதோர் இடத்தில் இடையூறேதையும் ஏற்படுத்தாது. அதியுயர் மீடிறனானது வளிமண்டல இரைச்சல்கள் போன்றவற்றினால் பெரிதாகப் பாதிப்படையாது,

பார்வையில் இருக்கும் தூரம் தொகு

அதியுர் அதிர்வெண்ணின் வீச்சானது (அதாவது அடையக் கூடிய தூரம்) தொலைத் தொடர்பாடல் உபகரணத்தின் சக்தி, வாங்கும் உபகரணத்தின் சக்தி போன்றவற்றுடன் பார்வையில் இருக்கும் தூரத்தில் தங்கியுள்ளது.

அண்ணளவான தூரமானது

  • தூரம் கிலோ மீட்டரில் =  , இங்கே   தொலைத் தொடர்பாடல் அண்டனாவின் உயரம் மீட்டரில்
  • தூரம் மைலில் =  , இங்கே   தொலைத் தொடர்பாடல் அண்டனாவின் உயரம் அடியில்

மேற்கோள்கள் தொகு

  1. "Rec. ITU-R V.431-7, Nomenclature of the frequency and wavelength bands used in telecommunications" (PDF). ITU. Archived from the original (PDF) on 31 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 February 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதி_உயர்_அதிர்வெண்&oldid=3540954" இலிருந்து மீள்விக்கப்பட்டது