அனாக் புக்கிட்

அனாக் புக்கிட் (Anak Bukit) மலேசியா, கெடா மாநிலத்தின் அரச நகரம். இது தனி ஒரு துணை மாவட்டமும்

அனாக் புக்கிட் (Anak Bukit) மலேசியா, கெடா மாநிலத்தின் அரச நகரம். இது தனி ஒரு துணை மாவட்டமும் ஆகும். கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. கெடா மாநில சுல்தான் அவர்களின் அரண்மனை இங்குதான் அமைந்து உள்ளது. கோலா கெடா நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்து இருக்கும் இந்த நகரத்திற்கு அருகில் அலோர் மேரா மற்றும் கெப்பாலா பத்தாஸ் நகரங்கள் உள்ளன.

அனாக் புக்கிட்
Anak Bukit

கெடா அரச நகரம்
அனாக் புக்கிட் அரண்மனை நுழைவாயில்
அனாக் புக்கிட் அரண்மனை நுழைவாயில்
நாடு மலேசியா
மாநிலம் கெடா
உருவாக்கம்1800
நேர வலயம்ஒ.ச.நே + 08:00
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)

கெடாவின் அரச அரண்மனை இங்கு அமைந்து இருப்பதால் இந்த நகரம் கெடாவின் அரச நகரம் என்று அழைக்கப் படுகிறது. மலேசியாவின் முன்னாள் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் அலீம் முவாடாம் சாவின் பிறப்பிடமாகவும் அறியப் படுகிறது.[1]

பொது தொகு

 
அனாக் புக்கிட் புதிய ஷாரியா நீதிமன்றம்
 
அனாக் புக்கிட் அரண்மனையின் இரவுத் தோற்றம்

2007-ஆம் ஆண்டில் இந்த அரண்மனை 70 மில்லியன் ரிங்கிட் செலவில் புதுப்பிக்கப்பட்டது. 1000 பேர் அமரக் கூடிய மண்டபத்தில் 1400 பேர் அமருவதற்கான மாற்றங்கள் செய்யப் பட்டன. 2008-ஆம் ஆண்டில் அந்த மண்டபத்தில் கெடா சுல்தானின் 50-வது ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.[2]

1958-ஆம் ஆண்டில் சுல்தான் பாட்லிஷா காலமானார். அவருக்குப் பின்னர் அவருடைய புதல்வரும் இப்போதைய சுல்தானுமாகிய அப்துல் ஹலீம் முவாடாம் சா, 1959 பிப்ரவரி 20-ஆம் தேதி, கெடாவின் 27-ஆவது சுல்தானாக அரியணை ஏறினார்.

அரண்மனையின் பின்புறத்தில் சுங்கை அனாக் புக்கிட் என்று அழைக்கப்படும் ஓர் ஆறு ஓடுகிறது. இந்த ஆறு சுங்கை கெடா என்று அழைக்கப்படும் கெடா ஆற்றுடன் இணைந்து அலோர் ஸ்டார் வழியாக கோலா கெடா சமவெளியில் பாய்கிறது.

புதிய நிர்வாகத் தலைநகரம் தொகு

அரண்மனை பூந்தோட்டத்தில் வண்ண மயமான தாவரங்கள் வளர்க்கப் படுகின்றன. தோட்டத்தின் மத்தியில் ஒரு சிறிய விலங்கியல் பூங்காவும் உள்ளது. அரண்மனை பூந்தோட்டத்தைப் பார்வையிடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.

ஒன்பதாவது மலேசியா திட்டத்தின் கீழ், அலோர் ஸ்டாருக்குப் பதிலாக கெடா மாநிலத்தின் புதிய நிர்வாகத் தலைநகரமாக, அனாக் புக்கிட் உருவாக்கம் பெற திட்டமிடப்பட்டது. அலோர் ஸ்டார் நகரம் தொடர்ந்து மாநிலத்தின் தலைநகரமாகவும் மற்றும் வணிக மையமாகவும் இயங்கி வரும்.

புதிய இரயில் நிலையம் தொகு

இதன் காரணமாக, அனாக் புக்கிட் நகரத்தின் உள்கட்டமைப்பு மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டது. புதிய மாநில அரசு நிர்வாகக் கட்டிடங்கள்; புதிய அனாக் புக்கிட் காவல் நிலையம்; புதிய தேசிய பதிவுத் துறை க்கட்டிடம் போன்றவை புதிதாகக் கட்டப் பட்டன.

ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக அனாக் புக்கிட் நகரில் ஒரு புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2014-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் இடிஎஸ் நிறுவனத்தின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அனாக்_புக்கிட்&oldid=3879941" இலிருந்து மீள்விக்கப்பட்டது