அனிஷ் குருவில்லா

இந்திய நடிகர், இயக்குநர்

அனிஷ் யோகன் குருவில்லா (Anish Kuruvilla) ஓர் இந்திய திரைப்பட நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்பட துறையில் பணிபுரிகிறார் .[1][2]

அனிஷ் குருவில்லா
திரைப்பட நிகழ்ச்சியில் குருவில்லா
பிறப்புஅனிஷ் யோகன் குருவில்லா
ஐதராபாத்து, இந்தியா
பணிநடிகர், இயக்குநர்

இயக்குனராவதற்கு முன், இவர் சேகர் கம்முலாவுடன் நிர்வாக தயாரிப்பாளராக இருந்தார். டாலர் ட்ரீம்ஸ் (2000) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஆனந்த் (2004) படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.[3] 12 வருடங்கள் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்த பிறகு, 2016ஆம் ஆண்டு வெளியான பெல்லி சூப்புலு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்திய துடுப்பாட்ட வீரர் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் இவர் தோன்றினார்.[4]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

குருவில்லா ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்து ஐதராபாத்தில் வளர்ந்தார். இவர் இராமந்தபூரில் உள்ள ஐதராபாத்து பொதுப் பள்ளியில் பயின்றார்.[5]

தொழில் தொகு

சேகர் கம்முலாவின் முதல் படமான டாலர் ட்ரீம்ஸ் என்ற படத்தில் வேடத்தில் அறிமுகமானார். மேலும் ஆனந்த் திரைப்படத்திலும் துணை வேடத்தில் நடித்தார்.[6] இவர் 2016ஆம் ஆண்டு பெல்லி சூப்புலு திரைப்படத்தில் தோன்றினார்.[7] இவர் இயக்குனராக அறிமுகமாகும் முன் நாகேஷ் குக்குனூர், மணிசங்கருடன் உதவி இயக்குநராக பணி புரிந்தார்.[5] சேகர் கம்முலா தயாரித்த ஆவக்காய் பிரியாணி படத்திலும், முன்னணி நடிகராக இருக்கும் சர்வானந்த் தயாரித்த கோ அண்டே கோட்டி என்ற படத்திலும் பணியாற்றினார்.

சான்றுகள் தொகு

  1. Sunita Chowdhary, Y. "Anish Kuruvilla moves to the forefront". thehindu.com. Kasturi and Sons. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.
  2. "Anish Kuruvilla set to make his debut in Malayalam". 123telugu.com. Mallemala Entertainments. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.
  3. "Anish Kuruvilla moves to the forefront". 2016-05-02. https://www.thehindu.com/features/metroplus/anish-kuruvilla-moves-to-the-forefront/article8547130.ece. பார்த்த நாள்: 2021-02-23. 
  4. "Pelli Choopulu actor Anish Kuruvilla in Bollywood!". tfpc.in. Telugu Film Producers Council. Archived from the original on 25 October 2016. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.
  5. 5.0 5.1 Sekhar, Kammula. "Anish Kuruvilla Interview by Sekhar Kammula". idlebrain.com. G.V. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.
  6. Sangeetha Devi, Dundoo. "Over to them". thehindu.com. Kasturi and Sons. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.
  7. Viswanath, V. "Pelli Choopulu: Movie Review". telugucinema.com. Archived from the original on 14 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிஷ்_குருவில்லா&oldid=3542211" இலிருந்து மீள்விக்கப்பட்டது