ஆவாதான், ஈரான்

(அபாடான், ஈரான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அபாடான் (Ābādān,பாரசீக மொழி: آبادانĀbādān) என்ற நகரம், அபாடான் மண்டலத்தில் உள்ளது. இந்த நகராட்சி அல்லது நகராண்மைக் கழகமானது, 1924 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த நகரம், அது இருக்கும் மண்டலத்தின், தலைநகரம் ஆகும். இந்த மண்டலமானது, ஈரான் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இருக்கும், கூசுத்தான் மாகாணத்தில் இருக்கும் மண்டலங்களில் ஒன்றாகும். இது 68 கி.மீ நீளமும், 3–19   கி. மீ அகலமும் கொண்ட அபாதீன் தீவில் உள்ளது. அபாடான் நீர்வழியும், கிழக்கே பக்மன்சீரின், கருண் நதியின் வெளியேற்று வழியாலும் சூழப்பட்டிருக்கிறது. பாரசீக வளைகுடாவிலிருந்து,[2] ஈரான்-ஈராக் எல்லைக்கு அருகில், 53 கிலோமீட்டர்கள் (33 mi) தொலைவில் அமைந்துள்ளது.

அபாடான்
آبادان
நகரம்
C
அபாடான் is located in ஈரான்
அபாடான்
அபாடான்
ஈரானில் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 30°20′21″N 48°18′15″E / 30.33917°N 48.30417°E / 30.33917; 48.30417
நாடு ஈரான்
மாகாணம்கூசித்தான்
அரசு
 • நகரத்தந்தைHosein Hamid-Pour
பரப்பளவு
 • நகர்ப்புறம்1,275 km2 (492 sq mi)
ஏற்றம்3 m (10 ft)
மக்கள்தொகை (2016 கணக்கெடுப்பு)
 • அடர்த்தி167/km2 (430/sq mi)
 • நகர்ப்புறம்2,31,476 [1]
 • Population Rank in Iran40வது
இனங்கள்Abadani (ஆங்கிலம்)
நேர வலயம்IRST (ஒசநே+03:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+04:30)
தொலைபேசி குறியீடு(+98) 061
காலநிலைSemi-arid climate#Cold semi-arid climates
இணையதளம்www.Abadan.ir

மக்கள் தொகை தொகு

மக்கள் தொகை
ஆண்டு மக்கள்
1910 400
1949 173,000 [3]
1956 220,000 [2]
1980 300,000
1986 6
1991 84,774 [4]
2001 206.073
2006 217,988 [5]

ஈரான்-ஈராக் போர் நடந்த எட்டு ஆண்டுகளில் (1980-1988) இந்நகரத்தின் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்து, இந்நகரமே வெறுமையானது. 1986 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 6 பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டனர். 1991 ஆம் ஆண்டில், 84,774 பேர் நகரத்தில் வசிக்க திரும்பினர்.[4] 2006 ஆம் ஆண்டு வாக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 206,073 ஆக உயர்ந்தது. பிறகு மேலும் உயர்ந்து, 48,061 குடும்பங்களில் 217,988 ஆக மக்கள் தொகை மாறியது. [5] அபாடான் சுத்திகரிப்பு நிலையம், உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களுள் ஒன்றாகும். இன்று இந்நகரில் வாழும் மக்கள் தொகை கிட்டத்தட்ட 350,000 ஆக உள்ளது.

எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரியும், 9% மேலாளர்கள் மட்டுமே கூசித்தானைச் சேர்ந்தவர்கள். பிற மேலாளர்கள், தெகுரான், காசுபியன், அசர்பைசான், குறுதித்தான் ஆகிய இடங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். தொழிலாளர்களாக இருப்பவர்களில் பெரும்பாலோர், அரபு நாட்டினர். இந்த மேலாளாராக இருப்பவர்கள், தொழிலாளர்களிடம் நெருங்கிப் பழகுவதில்லை[6]. நகரத்தின் நடுப்பகுதியில், ஆர்மீனிய தேவாலயம் ஒன்று இருக்கிறது.

வரலாறு தொகு

அபாஸிட்ஸின் ஆட்சியின் கீழ், அபாடான் இருந்த போது, ஒரு பெரிய துறைமுக நகரமாக மாற்றம் அடைந்ததாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில், இது உப்பு மற்றும் நெய்த பாய்களின் வணிகங்களில் இருந்தது.[2] ஆற்றில் வண்டலானது, இந்நகரத்தினை, நீர்நிலையில் இருந்து சற்றுத் தொலைவில் உருவாக அடித்தளமிட்டது. 14 ஆம் நூற்றாண்டில், அபான் ஒரு தட்டையான உப்பு சமவெளியில் அமைந்து, சிறிய துறைமுகமாக இருந்ததாக இப்னு பட்டுடா விவரிக்கிறார்.[2] அரசியல் அடிப்படையில், அபாடான் பெரும்பாலும் அருகிலுள்ள மாநிலங்களுக்கு இடையில் சர்ச்சைக்கு உள்ளாகியது. 1847 ஆம் ஆண்டில், பெர்சியா அதை ஒட்டோமான் பேரரசிதிமிருந்து பெற்றது [4]. பிறகு, 17 ஆம் நூற்றாண்டு முதல் அபாடான் தீவில் இந்நகரம் இருக்கிறது. அரபு பழங்குடியினரான, மோகய்சென்னின் தலைமையகமாக, சிறு நிலப்பகுதி இருந்தது. 1924 ஆம் ஆண்டு சேயிக் காசால் கான் (Shaikh Khaz'al Khan) இத்தலைமையகத்தினை அகற்றினார்.[7]

 
வெடித்த T-54/55 தொட்டி, ஈரான்-ஈராக் போரின் (1980-1988) அடையாளமாக உள்ளது.
 
அபாடானில் இருக்கும் கட்டிடத்தின் இடிபாடுகள். ஈரான்-ஈராக் போரின் போது (1980–88) இந்நகருக்கு சதாமின் கொடிய இரசாயன ஆயுதங்கள் உட்பட பலவற்றால், கடுமையான சேதங்கள் ஏற்பட்டன.

20 ஆம் நூற்றாண்டு பிறகே, இந்த பகுதியில், எண்ணெய் வளமிக்க எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஜூலை 16, 1909 அன்று, அர்னால்டு வில்சனின் உதவியுடன், பிரித்தானிய துதரான பெர்சி காக்சி நடத்திய இரகசிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இதன் அதிபர் அபாடான் உள்ளிட்ட தீவுகளில், வாடகை ஒப்பந்தத்தினை இட்டு செயற்பட ஒப்புக்கொண்டார்.[8][9][10] [nb 1]. 1924 வரை, அந்தத் தீவின் நிர்வாகத்தை, அந்த அதிபரேத் தொடர்ந்தார்.[8] ஆங்கிலோ-பாரசீக எண்ணெய் நிறுவனம் தங்கள் முதல் பைப்லைன் டெர்மினஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, 1909 ஆம் ஆண்டில் தொடங்கி 1912 இல் நிறைவுசெய்தது. ஆகத்து 1912 க்குள் எண்ணெய் உற்பத்தி பெறுக்கியது.[11][12] இதன் சுத்திகரிப்பு செயல்திறனால், 1912-1913 இல் 33,000 டன்னிலிருந்து, 1931 ஆம் ஆண்டு 4,338,000 டன்களாக உயர்ந்தன. 1938 ஆம் ஆண்டுவாக்கில், இந்நிறுவனமே, உலகின் மிகப்பெரியதாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரில், ஆங்கிலோ-சோவியத் படையெடுப்பின் போது, ஈரானிய படைகளுக்கும், பிரித்தானிய, இந்தியப படைகளுக்கும் இடையில், போர் வெகுவாக நடந்த இடமாக அபாடான் இருந்தது. பின்னர், அமெரிக்க தங்களது லெப்ட்-லீஸ் விமானங்களை சோவியத் யூனியனுக்கு அனுப்புவதற்கான முக்கிய தளவாட நடுவமாக, இந்த அபாடான் நகரம் இருந்தது.[8][13]

போக்குவரத்து தொகு

இந்த நகரத்தை, அபாதன்-அயதுல்லா யாமி பன்னாட்டு வானூர்தி நிலையமானது, பல்வேறு வணிக வானூர்தி வழித்தடங்களில் இயங்கும் வானூர்தி வசதியைப் பெற்றுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Center of Iran > Home". www.amar.org.ir.
  2. 2.0 2.1 2.2 2.3 Hoiberg 2010
  3. Hein & Sedighi 2016.
  4. 4.0 4.1 4.2 Lagassé 2000
  5. 5.0 5.1 Vadahti 2006.
  6. Elwell-Sutton & de Planhol 1982, ப. 55–56
  7. Elwell-Sutton & de Planhol 1982
  8. 8.0 8.1 8.2 Ferrier 1991
  9. Greaves 1991
  10. Abrahamian 2008
  11. MacPherson 1989
  12. Issawi 1991
  13. "Document Detail for IRISNUM= 00190278". Air Force History Index. 1987-04-03. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014.

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவாதான்,_ஈரான்&oldid=3085939" இலிருந்து மீள்விக்கப்பட்டது