அபு நுவாஸ்

ஈராக் கவிஞர்

அபு நுவாஸ் என அறியப்பட்ட அபு நுவாஸ் அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி (750-810) என்பவர் [1] ,(அரபு மொழி: أبو نواس‎; பாரசீக மொழி: ابو نواس‎, ஆங்கில மொழி: Abū Novās), அக்காலத்தில் மிகப் புகழ் பெற்ற அராபிய, பாரசீக மொழிக் கவிஞர்களில் ஒருவராவார். பாரசீகத்தில், அஹ்வாஸ் என்னும் நகரில் பிறந்த இவர் அரபு தந்தைக்கும் பாரசீக தாய்க்கும் பிறந்தவராவார்.[1] இவர் அரபு மொழிக் கவிதைகளின் எல்லா வகைகளையும் கையாளக் கூடிய திறமை பெற்றிருந்தார். நாட்டார் மரபில் ஈடுபட்ட இவர் ஆயிரத்தொரு இரவுகள் நூலில் பல தடவைகள் இடம்பெற்றுள்ளார்.[2]

அபு நுவாஸ்
கலீல் ஜிப்ரான் வரைந்த படம். (ஜூன் 1916)
கலீல் ஜிப்ரான் வரைந்த படம். (ஜூன் 1916)
பிறப்பு756
இறப்பு814 (அகவை 57–58)
தொழில்கவிஞர்

இவருடைய தந்தையார் ஹனி இரண்டாம் மர்வானின் படையில் ஒரு போர்வீரனாக இருந்தார். அபு நுவாஸ் இவரைக் கண்டதில்லை. பாரசீகப் பெண்ணான இவரது |தாயார் கோல்பான் ஒரு நெசவாளராகப் பணி புரிந்து வந்தார். அபு நுவாசின் வரலாறுகள், அவரது பிறந்த ஆண்டு குறித்து, 747 க்கும், 762 க்கும் இடையில் வேறுபடுகின்றன. சிலர் இவர் டமாஸ்கஸ் நகரில் பிறந்ததாகக் கூறுகின்றனர். வேறு சிலர் இவர் பிறந்த இடம் பஸ்ரா என்று கூற இன்னும் சிலர் அஹ்வாஸ் என்கின்றனர். இவருக்கு இடப்பட்ட பெயர் அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி. அபு நுவாஸ் என்பது இவரது பட்டப் பெயர். இப் பெயர் குடுமியின் தந்தை என்னும் பொருள் கொண்டது. இவரது தலையிலிருந்து தோள்வரை தொங்கிய பக்கக் குடுமிகளைக் குறித்தே இப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

நாடு கடத்தலும் சிறைத் தண்டனையும் தொகு

 
ஓவியர் ஓமர் பரோக் வரைந்த அபி நுவாஸ் ஓவியம்

அபு நுவாஸ், காலிப் வம்சத்தைச் சேர்ந்த கரூன்- அல்- ரிசாத்தினால் வீழ்த்தப்பட்ட பாரசீக அரசியல் குடும்பமான பர்மாக்கிஸ் குறித்து வாழ்த்தும் வகையில் எழுதிய பாடலுக்காக சில காலம் எகிப்துக்கு தப்பி ஓடினார். கரூன்- அல்- ரிசாத்தின் மரணத்தின் பின் 809 இல் பக்தாத் திரும்பினார். அடுத்து பதவிக்கு வந்த முகமத் அல் அமீன் என்பவர் கரூன்- அல்- ரிசாத்தின் மகன். இவர் அபு நுவாஸின் முன்னாள் மாணவர். இவரது காலத்தில் (809-813)தான் அபு நுவாஸ் அதிக கவிதைகள் எழுதியதாக கருதப்படுகின்றது.

"அவரது காலத்து விமரிசனங்களின் படி இசுலாமின் மிகப்பெரிய கவிஞராக அவர் விளங்கினார்." என எஃப். எஃப். ஆபுத்னொட் , அரபிய எழுத்தாளர்கள் எனும் நூலில் குறிப்பிடுவார். அவரது சம காலத்தவரான அபு காதிம் அல் மெக்கி, ஆழமான கருத்துமிக்க சிந்தனைகள் அபு நுவாஸ் தோண்டியெடுக்கும் வரை ஆழப் புதைந்து கிடப்பதாக இவரைக் குறிப்பிடுவார்.

அபு நுவாஸின் மதுவுக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமையான தன்மை காரணமாக பொறுமை இழந்த அமின் இவரைச் சிறையில் அடைத்தான். அமீனுக்கு பின் ஆட்சிப் பீடம் ஏறிய அவனது தம்பியான அல்- மாமுன் இவர் மீது சகிப்புத் தன்மை இழந்து காணப்பட்டான்.அபு நுவாஸ் தனது இறுதிவரை சிறையில் கழித்ததாக கருதப்படுகின்றது.

அபு நுவாஸ் பற்றிய குறிப்புகள் தொகு

அல்- கதிப் அல் பக்தாதி எனும் எழுத்தாளரின் பக்தாத் வரலாறு எனும் நூலில் அபு நுவாஸ் பக்தாத்தில் உள்ள சுனிசி சவக்காலையில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது .[3] இந்நகரத்தின் பல்வேறு இடங்களுக்கு அபு நுவாஸ் பெயர் இடப்பட்டுள்ளது.

இசுலாமிய பண்பாடுகளுக்கு முரணான இவரது பல படைப்புகள், அவது வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பறை சாற்றுகின்றன. 2001 சனவரியில், எகிப்திய கலாசார அமைச்சு தன்னின சேர்க்கையை தூண்டுவதான அபு நுவாஸின் 6,000 கவிதை நூல்களை எரித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது .[4][5]

1976இல், வெள்ளிக் கோளில் உள்ள எரிமலை ஒன்றுக்கு அபு நுவாஸின் பெயரிடப்பட்டது. [6]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Garzanti
  2. Esat Ayyıldız. "Ebû Nuvâs’ın Şarap (Hamriyyât) Şiirleri". Bozok Üniversitesi İlahiyat Fakültesi Dergisi 18 / 18 (2020): 147-173.
  3. Ibn Khallikan's biographical dictionary - Google Books. Books.google.com. https://books.google.com/books?id=5DlbAAAAQAAJ&lpg=PA394&ots=4twy8GhFuH&dq=Abu%20Nuwas%20buried%20cemetery&pg=PA394#v=onepage&q=Abu%20Nuwas%20buried%20cemetery&f=false. பார்த்த நாள்: 2010-09-12. 
  4. Al-Hayat, January 13, 2001
  5. Middle East Report, 219 Summer 2001
  6. "USGS Astro: Planetary Nomenclature: Feature Data Search Results". USGS Gazetteer of Planetary Nomenclature Feature Information. பார்க்கப்பட்ட நாள் October 21, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு_நுவாஸ்&oldid=3276084" இலிருந்து மீள்விக்கப்பட்டது