அப்சராகொண்டா

அப்சராகொண்டா (Apsarakonda) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் வடகன்னட மாவட்டத்தில் உள்ள ஒன்னாவரா என்ற துறைமுக நகருக்கு அருகில் உள்ள ஒரு சுற்றுலா கிராமம் ஆகும். ஒன்னாவரா பேருந்து நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.[1]

அப்சராகொண்டா
Apsarakonda

ಅಪ್ಸರಕೊಂಡ
Country இந்தியா
மாநிலம்கர்நாடகா
Regionகனரா
மாவட்டம்வட கன்னட மாவட்டம்
Talukஒன்னாவரா
Languages
 • Officialகன்னடம்

பெயர்காரணம் தொகு

அப்சராகொண்டா என்பதன் பொருள் தேவதைகள் குளம் என்பதாகும். கடற்கரையைப் பார்த்தபடி அக் குளம் இருப்பதானால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இங்கிருந்த நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் ஓய்வெடுக்கவும் தேவதைகள் தேர்ந்தெடுத்த இடம் இப்பகுதியாகும் எனப் புராணக்கதைகள் கூறுகின்றன.[2]

சிறப்புகள் தொகு

 
கடற்கரையை நோக்கியுள்ள குளம்

மகா விநாயகர் கோயில் மற்றும் உக்ர நரசிம்மர் கோயில் ஆகிய கோயில்களுக்குப் பின்புறமாக அப்சராகொண்டா நீர்வீழ்ச்சி இருக்கிறது. மேலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க பாண்டவர் குகைகள் இங்கிருப்பதாகக் கூறப்படுகின்றன. இக்குளத்திற்கு அருகில் பிரபலமடையாத கடற்கரைகள் உள்ளன.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Uttara Kannada Tourism". Archived from the original on 2015-06-06. பார்க்கப்பட்ட நாள் 2016-01-07.
  2. "Apsarakonda Falls, Honnavar – An Enchanting Destination". பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
  3. "Apsara Konda Beach".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சராகொண்டா&oldid=3541037" இலிருந்து மீள்விக்கப்பட்டது