அப்துல் ரஹீம் கான்-இ-கானா

அப்துல் ரஹீம் கான்-இ-கானா (Abdul Rahim Khan-e-Khana ,இந்தி: अब्दुल रहीम ख़ान-ए-ख़ाना, உருது: عبدالرحيم خانخان, () முகலாய அரசர் அக்பரின் அரசவையில் இருந்த முக்கியமான அமைச்சர் ஆவார். அக்பரின் அரசவையில் இருந்த ஒன்பது அமைச்சர்கள் நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் இவர். இவரை ரஹீம் என்றும் அழைத்தனர். இவர் அவரது இரட்டை வரி ஹிந்திக் கவிதைகளுக்காகவும் வானியல் தொடர்பான புத்தகங்களுக்காகவும் அறியப்பட்டவர்[1]. இவரது காலத்திற்குப் பின்னர் இவரது பெயரில் கான்கானா எனும் கிராமத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. இக்கிராமம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் நவான்ஷாக்ர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அக்பருடன் அப்துல் ரஹீம் கான்-இ-கானா

மேற்கோள்கள் தொகு

  1. "Abdur Rahim KhanKhana at Old poetry". Oldpoetry.com. Archived from the original on 2010-09-24. பார்க்கப்பட்ட நாள் 2010-09-30.