அமெரிக்கோ (பாடகர்)

டொமிங்கோ ஜானி வேகா உர்சுவா (Domingo Jonhy Vega Urzúa, திசம்பர் 24, 1977, அரிகா, சிலி), அல்லது பரவலாக அமெரிக்கோ , ஓர் சிலி நாட்டுப் பாடகர். மெதுவான தாளகதியில் அமைந்த பொலேரோ என்ற இலத்தீனிய இசைவகைப் பாடகரான மெல்வின் "கோரோசோன்" அமெரிக்கோவிற்கும் அவருடன் இணைந்திசைப் பாடும் மனைவியார் மெர்சிலா டோல்டோவிற்கும் மகனாகப் பிறந்தவர். அமெரிக்கோ யி லா நியூவா அல்ஜீரியா என்ற இசைக்குழுவில் முதன்மைப் பாடகராக ஆனபிறகு பரவலாக அறியப்பட்டார்.

அமெரிக்கோ
Américo
"லா நியூவா அல்ஜீரியா"வுடன் அமெரிக்கோ பயன்படுத்திய சின்னம்.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்டொமிங்கோ ஜானி வேகா உர்சுவா
பிற பெயர்கள்அமெரிக்கோ
பிறப்புதிசம்பர் 24, 1977 (1977-12-24) (அகவை 46)
பிறப்பிடம்அரிகா,  சிலி
இசை வடிவங்கள்ஆபிரிக்க/மேற்கிந்திய இசை, இலத்தீன் அமெரிக்க வகை கும்பியா
தொழில்(கள்)பாடகர், பாடலாசிரியர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1985-நடப்பு
வெளியீட்டு நிறுவனங்கள்ஃபெரியா மியூசிக்
இணைந்த செயற்பாடுகள்அமெரிக்கோ யி லா நியூவா அல்ஜீரியா
இணையதளம்Official website

இசைத்தட்டு வரலாறு தொகு

இசைத்தள பாடல்தொகுப்புகள் தொகு

லா நியூவா அல்ஜீரியா குழுவினருடன்
  • அசி யே (மே 15, 2008 வெளியீடு; உயர்ந்த தரவரிசை #2 சிலி)
  • அ மோரிர் (அக்டோபர் 25, 2008 வெளியீடு; உயர்ந்த தரவரிசை #1 சிலி)

தனியே தொகு

லா நியூவா அல்ஜீரியா குழுவினருடன்
  • எல் எம்ப்ரூயோ (El Embrujo) (#1 சிலி)
  • ட்ராய்சியோனேரா (Traicionera) (#9 சிலி)
  • (டே வாசு) (#2 சிலி)
  • கே லெவாந்த் லா மனோ (Que Levante La Mano) (#3 சிலி)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்கோ_(பாடகர்)&oldid=3861568" இலிருந்து மீள்விக்கப்பட்டது