அமெரிசியம்(III) குளோரைடு

அமெரிசியம்(III) குளோரைடு (Americium(III) chloride) என்பது AmCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியம் டிரைகுளோரைடு, அமெரிசியம் முக்குளோரைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. அமெரிசியம் மற்றும் குளோரின் தனிமங்கள் இணைந்து இளஞ்சிவப்புநிறத்தில் அறுகோணப் படிகங்களாக அமெரிசியம்(III) குளோரைடு உருவாகிறது. திண்ம நிலையில் ஒவ்வொரு அமெரிசியம் அணுவும் மூவுச்சி முக்கோணப் பட்டகத்தில், ஒன்பது குளோரின் அணுக்களை தோராயமாக சமமான தூரத்தில் அண்மை உறவாகக் கொண்டுள்ளன[3][4].

அமெரிசியம்(III) குளோரைடு
Unit cell, ball and stick model of americium(III) chloride with a legend
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமெரிசியம்(III) குளோரைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
அமெரிசியம்(3+) குளோரைடு
வேறு பெயர்கள்
அமெரிசியம் குளோரைடு
அமெரிசியம் முக்குளோரைடு
இனங்காட்டிகள்
13464-46-5 N
ChemSpider 15964177 Y
InChI
  • InChI=1S/Am.3ClH/h;3*1H/q+3;;;/p-3 Y
    Key: GQKWPBIZTINWCF-UHFFFAOYSA-K Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Cl-].[Cl-].[Cl-].[Am+3]
பண்புகள்
AmCl3
வாய்ப்பாட்டு எடை 349.35 g·mol−1
தோற்றம் இளம் சிவப்பு, ஒளிபுகாப் படிகங்கள்
அடர்த்தி 5.87 கி செ.மீ−3[1]
உருகுநிலை 715 °C (1,319 °F; 988 K)[2]
கொதிநிலை 850 °C (1,560 °F; 1,120 K)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம் (UCl3 type), hP8
புறவெளித் தொகுதி P63/m, No. 176
ஒருங்கிணைவு
வடிவியல்
மூவுச்சி முக்கோணப் பட்டகம்
(ஒன்பது ஒருங்கிணைவுகள்)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் யூரோப்பியம்(III) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

அமெரிசியம் முக்குளோரைடின் அறுநீரேற்று வடிவம் ஒற்றைச்சாய்வு படிகவமைப்பைக் கொண்டுள்ளது. இவ்வமைப்பில், ஏ=970.2 பை.மீ, பி= 656.7 பை.மீ , சி= 800.9 பை.மீ, β = 93°.37’ மற்றும் இடக்குழு: P2/n.என்ற அமைப்பு காணப்படுகிறது[5]

வினைகள் தொகு

இலந்தனைடு கலவைகளை தனித்தனியாகப் பிரிக்க அமெரிசியம்(III) குளோரைடு மின் தூய்மையாக்கல் முறை ஆராயப்பட்டு வருகிறது. அமெரிசியம்(III) குளோரைடு உருவாக்கத்தில், நிலையான கிப்சின் ஆற்றலானது, எஞ்சியிருக்கும் இலந்தனைடு குளோரைடுகளின் ஆற்றல் உருவாக்கத்திலிருந்து வேறுபட்டதாகும்[6] இவ்வேறுபாட்டைப் பயன்படுத்தி பதனிடப்படாத கலவையுடன் சோடியம் குளோரைடு போன்ற உப்புகளைச் சேர்த்து உருக்குவதன் மூலம் புளூட்டோனியத்திலிருந்து அமெரிசியத்தை பிரித்தெடுக்க முடியும்[7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Chemistry: Periodic Table: americium: compound data (americium (III) chloride)". WebElements. பார்க்கப்பட்ட நாள் 2008-06-24.
  2. Perry, Dale L.; Phillips, Sidney L. (1995), Handbook of Inorganic Compounds, CRC Press, p. 15, ISBN 0-8493-8671-3, பார்க்கப்பட்ட நாள் 2008-06-25
  3. L. B. Asprey, T. K. Keenan, F. H. Kruse: "Crystal Structures of the Trifluorides, Trichlorides, Tribromides, and Triiodides of Americium and Curium", Inorg. Chem. 1965, 4 (7), 985–986; எஆசு:10.1021/ic50029a013.
  4. A. F. Wells: Structural Inorganic Chemistry 5th edition (1984) Oxford Science Publications, ISBN 0-19-855370-6.
  5. John H. Burns, Joseph Richard Peterson: "The Crystal Structures of Americium Trichloride Hexahydrate and Berkelium Trichloride Hexahydrate", Inorg. Chem. 1971, 10 (1), 147–151; எஆசு:10.1021/ic50095a029.
  6. Nuclear Energy Agency (2001), Proceedings of the Workshop on Pyrochemical Separations, Avignon, France: OECD Publishing, pp. 276–277, ISBN 92-64-18443-0, பார்க்கப்பட்ட நாள் 2008-06-24
  7. Plutonium Processing In The Nuclear Weapons Complex, Diane Publishing, 1992, p. 21, ISBN 1-56806-568-X, பார்க்கப்பட்ட நாள் 2008-06-24
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிசியம்(III)_குளோரைடு&oldid=3734701" இலிருந்து மீள்விக்கப்பட்டது