அமோனியம் சீரியம்(IV) சல்பேட்டு

அமோனியம் சீரியம்(IV) சல்பேட்டு (Ammonium cerium(IV) sulfate) என்பது (NH4)4Ce(SO4)4.2 H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாக செயல்படுகிறது. இச்சேர்மத்தின் குறைப்புத் திறன் +1.44 வோல்ட்டு ஆகும். சீரியம்(IV) சல்பேட்டு இச்சேர்மத்துடன் தொடர்புடைய சேர்மமாகும்.

அமோனியம் சீரியம்(IV) சல்பேட்டு
இனங்காட்டிகள்
10378-47-9 Y
ChemSpider 17339565 N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Ce+4].[O-]S(=O)(=O)[O-].[O-]S([O-])(=O)=O.[O-]S([O-])(=O)=O.[O-]S([O-])(=O)=O.O.O.[NH4+].[NH4+].[NH4+].[NH4+]
பண்புகள்
H20N4S2O18Ce
வாய்ப்பாட்டு எடை 632.55 கி/மோல்
தோற்றம் ஆரஞ்சு நிறத் திண்மம்
தண்ணீரில் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டி
R-சொற்றொடர்கள் R36, R37, R38
S-சொற்றொடர்கள் S26, S36
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

அமைப்பு தொகு

இச்சேர்மம் Ce2(SO4)88− எதிர்மின் அயனியைப் பெற்றுள்ளது என்று படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இங்கு சல்பேட்டுத் தொகுதியைச் சேர்ந்த ஒன்பது ஆக்சிசன் அணுக்கள் உருச்சிதைந்த முப்பொதி முக்கோணப் பட்டகத்தில் சீரியம் அணுக்களுடன் ஒருங்கிணைப்பு கொண்டுள்ளன[1].

மேற்கோள்கள் தொகு

  1. Shan, Y.; Huang, S. D. (1998). "(NH4)8[Ce2(SO4)8] .4H2O". Acta Crystallographica Section C Crystal Structure Communications 54 (12): 1744–1745. doi:10.1107/S0108270198007057. பன்னாட்டுத் தர தொடர் எண்:0108-2701.