அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி

அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி, (Amreshwar Pratap Sahi) (பிறப்பு: 1 ஜனவரி 1959) ஒரு இந்திய நீதிபதி[1] மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாவார். 1985ஆம் ஆண்டில் சட்டப் பட்டம் பெற்ற இவர், செப்டம்பர் 6, 1985 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக சேர்ந்தார். இங்கு இவர் சொத்து மற்றும் அரசியலமைப்பு விடயங்களில் அனுபவமானார்.[2] பின்னர் செப்டம்பர் 24, 2004 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2] இதனைத் தொடர்ந்து ஆகத்து மாதம் 18, 2005-ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கபட்டார். அக்டோபர் 23 அன்று, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 10 நவம்பர் 2018 அன்று, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[3]17 நவம்பர் 2018 அன்று, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 11 நவம்பர் 2019 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

நீதியரசர்
அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி
CJ
சென்னை உயர் நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி
பதவியில்
11 நவம்பர் 2019 – 31 டிசம்பர் 2020
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
ஆளுநர்பன்வாரிலால் புரோகித்
முன்னையவர்விஜய தஹில் ரமணி
பின்னவர்சன்ஜிப் பானர்ஜி
பாட்னா நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி
பதவியில்
17 நவம்பர் 2018 – 10 நவம்பர் 2019
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
ஆளுநர்லால்ஜி டாண்டன்
முன்னையவர்முகேஷ் ஷா
பின்னவர்சஞ்சய் கரோல்
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின்நீதிபதி
பதவியில்
24 செப்டம்பர் 2004 – 16 நவம்பர் 2018
பரிந்துரைப்புரமேஷ் சந்திர லஹோட்டி
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1959 (1959-01-01) (அகவை 65)

மேற்கோள்கள் தொகு

  1. "List of High Court Judges | Department of Justice | Ministry of Law & Justice | GoI". doj.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-25.
  2. 2.0 2.1 PTI (November 17, 2018). "Justice A P Sahi sworn in as chief justice of Patna HC". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/patna/justice-a-p-sahi-sworn-in-as-chief-justice-of-patna-hc/articleshow/66667165.cms. 
  3. Debashish Karmakar (November 11, 2018). "A P Sahi new Chief Justice of Patna high court". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/patna/a-p-sahi-new-cj-of-patna-high-court/articleshow/66571023.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரேஷ்வர்_பிரதாப்_சாஹி&oldid=3322662" இலிருந்து மீள்விக்கப்பட்டது