அரசு அருங்காட்சியகம், பெங்களூரு

பெங்களூரில் உள்ள அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம் (பெங்களூர்) இந்தியாவின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இந்த அருங்காட்சியகம் மைசூர் அரசால் 1865 ஆம் ஆண்டில் சர்ஜன் எட்வர்ட் பல்ஃபோர் [3]> வழிகாட்டலில் நிறுவப்பட்டதாகும். இவர்தான் சென்னையில் அருங்காட்சியகம் அமைத்தார். இந்த அருங்காட்சியகத்தை அமைக்க மைசூர் தலைமை கமிஷனர் லிண்டன் பவுரிங் என்பவரின் ஆதரவும் இருந்தது. [4] தென்னிந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் என்ற சிறப்பைப் பெற்ற இந்த அருங்காட்சியகம், தற்போது ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாக உள்ளது மற்றும் பழைய நகைகள், சிற்பம், நாணயங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்ட தொல்பொருள் மற்றும் புவியியல் கலைப்பொருட்களின் அரிய தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆரம்பகால கன்னட கல்வெட்டான (கி.பி. 450) ஹல்மிடி கல்வெட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [5]

அரசு அருங்காட்சியகம், பெங்களூர்
Map
நிறுவப்பட்டது18 ஆகஸ்டு 1865[1]
அமைவிடம்கஸ்தூரிபா சாலை, பெங்களூர், இந்தியா
ஆள்கூற்று12°58′29″N 77°35′45″E / 12.9747°N 77.5958°E / 12.9747; 77.5958
சேகரிப்பு அளவுசிற்பம், பழங்கால நகை, நாணயங்கள், கல்வெட்டுகள்
வருனர்களின் எண்ணிக்கைஆண்டுக்கு 90,000[2]

வரலாறு தொகு

அடித்தளம் தொகு

 
சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள எட்வர்ட் ஜி. பல்ஃபோரின் உருவப்படம்

பெங்களூரில் உள்ள அரசாங்க அருங்காட்சியகம் எல்.பி. பவுரிங் மைசூர் மாநில தலைமை ஆணையராக இருந்த காலத்தில் ஆகஸ்ட் 18, 1865 ஆம் நாளன்று நிறுவப்பட்டது. ஏப்ரல் 17, 1866 ஆம் நாளன்று மைசூர் அரசு இதழில் இதனைப் பற்றிய முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது, இதன் நகல் பெங்களூரில் உள்ள கர்நாடக மாநில காப்பகங்களில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பண்பாட்டு மற்றும் இயற்கை கலைப்பொருட்களை அருங்காட்சியகத்திற்கு காட்சிக்கு வழங்க வேண்டி பொதுமக்களைக் கேட்டு, அதிகாரபூர்வமான அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அருங்காட்சியகமானது எட்வர்ட் ஜி பல்ஃபோர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நிறுவப்பட்டது. அவர் சென்னை இராணுவத்தில் ஒரு மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்தார். பெங்களூரிலிந்து அவர் சென்னைக்கு . பணி மாற்றம் பெற்றார். மாற்றம் பெற்று சென்னை வந்தபின்னர் அவர், முன்பு 1851 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவியிருந்த .அருங்காட்சியகத்தை ஒத்த அருங்காட்சியகத்தை அமைக்க பரிந்துரை செய்தார். பல்ஃபோர் 1851 ஆம் ஆண்டின் மாபெரும் கண்காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து அதில் காட்சிப்படுத்தும் நோக்கில் பல தொகுப்புகளை சேகரித்து வைத்திருந்தார். பல்ஃபோர், அருங்காட்சியகத்தில் விலங்கியல் மற்றும் இயற்கை மாதிரிகளின் தொகுப்பைக் காட்சிப்படுத்தி இருந்தார். அக்காலகட்டத்தில் பெங்களூரில் இருந்த அரசு அருங்காட்சியகம் மைசூர் அரசு அருங்காட்சியகம் என்று அழைக்கப்பட்டது. அதற்கான கட்டடம் 1877 ஆம் ஆண்டில் அப்போது சிட்னி சாலை (தற்போது இச்சாலை கஸ்தூரிபா சாலை என்று அழைக்கப்படுகிறது) என்று அழைக்கப்பட்ட இடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

முதல் இல்லம் தொகு

இந்த அருங்காட்சியகம் முதன்முதலில் கன்டோன்மென்ட் சிறை கட்டிடத்தில் நிறுவப்பட்டது. அங்கு இந்த அருங்காட்சியகம் 1878 ஆண்டு வரை 13 ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

புதிய கட்டிடம் தொகு

சிறைச்சாலை கட்டிடம் ஒரு அருங்காட்சியகத்திற்கு ஏற்றதாகக் கருதப்பட்ட நிலையில, மேலும் கன்டோன்மென்ட் அருகே ஒரு சிறப்பு அருங்காட்சியகக் கட்டிடம் கட்டுவதற்கான முடிவு செய்யப்பட்டது. பின்னர் தற்போதைய இடம் அருங்காட்சியகத்தின் புதிய கட்டடடம் அமைவதற்கான இடமாகத் தெரிவு செய்யப்பட்டது. புதிய அருங்காட்சியகம் (தற்போதைய கட்டமைப்பு) 1877 ஆம் ஆண்டில், அந்த காலகட்டத்தில் மைசூர் மாநிலத்தின் தலைமை பொறியாளராக இருந்த ரிச்சர்ட் ஹீராம் சாங்கி என்பவரால் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது [6] .

இந்த அருங்காட்சியகம் தமாஷா இல்லம் (பொழுதுபோக்கு இல்லம்) என்று பிரபலமாக அறியப்பட்டது.

கட்டிடம் தொகு

இந்த அருங்காட்சியகத்தின் அருகில் விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் மற்றும் வெங்கடப்ப கலைக்கூடம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த அருங்காட்சியகம் கஸ்தூர்பா சாலையில் மையமாக அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 1877 ஆம் ஆண்டில் புதுச்செவ்வியல் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது. இதன் இருபுறமும் இரண்டு போர்டிகோக்களைக் கொண்டு அமைந்துள்ளது, கொரிந்திய நெடுவரிசைகள், வட்ட வளைவுகள், மற்றும் முக்கிய சாய்வான பக்கச் சுவர்கள் உள்ளிட்ட பல கட்டட அமைப்புகளை இதில் காணமுடியும்..

சேகரிப்புகள் தொகு

 
ஹல்மிடி கல்வெட்டின் மாதிரிப்படி

இந்த அருங்காட்சியகத்தில் இரண்டு கண்காட்சித் தளங்கள் உள்ளன. அவை 18 காட்சியகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.அவற்றில் சிற்பம், இயற்கை வரலாறு, புவியியல், கலை, இசை மற்றும் நாணயவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிவுகள் அமைந்துள்ளன.

இந்த அருங்காட்சியகம் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாகும். இங்கு பழைய நகைகள், சிற்பம், நாணயங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்ட தொல்பொருள் மற்றும் புவியியல் கலைப்பொருட்களின் அரிய தொகுப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் 70 ஓவியங்கள், 84 சிற்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பிற கலைப்பொருட்கள் காட்சியில் உள்ளன. அவற்றில் சில அருங்காட்சியகத்திற்கு உரிய தனித்தன்மை கொண்டவையாக உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் ஹொய்சாலா, காந்தாரா மற்றும் நுளம்பா காலங்களைச் சேர்ந்த சிற்பங்கள் உள்ளன.

சந்திரவல்லியின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட கற்கால மட்பாண்டங்கள், மொகெஞ்சதாரோ, ஹளேபீடு மற்றும் விஜயநகர அகழ்வாய்வினைச் சேர்ந்த கலைப்பொருள்கள், மதுராவைச் சேர்ந்த டெரகோட்டா பொருள்கள், குடகுப் பகுதியைச் சேர்ந்த ஆயுதங்கள் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் 5000 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னங்களும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. மேலும் டெக்கான், மைசூர் மற்றும் தஞ்சை ராஜ்யங்களின் அரிய ஓவியங்களும் இங்கு காணப்படுகின்றன.

இந்த அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தானின் கோட்டையான ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மாதிரி காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. திப்பு காலத்திலிருந்து அருங்காட்சியகத்தில் ஒரு தொகுப்பு உள்ளது, அதில் 12 பாரசீக மொழியில் அமைந்த வரிகள் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு பழைய இசைக்கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 64 நாயன்மார்களைக் கொண்டமைந்த தஞ்சை பாணியில் அமைந்த ஓவியம் காட்சியில் உள்ளது.

அருங்காட்சியகத்தின் மதிப்புமிக்க சேகரிப்புகளாக முந்தைய கன்னட கல்வெட்டு- ஹல்மிடி கல்வெட்டு (பொ.ச. 450), [5] பேகூர் கல்வெட்டு (கி.பி 890), [7] அட்டகூர் கல்வெட்டு (கி.பி 949) அடுக்குகள் ஆகியவற்றைக் கூறலாம்.

பார்வையாளர்கள் தொகு

இந்த அருங்காட்சியகம் அதன் வரலாற்றின் ஆரம்ப காலம் முதலாக பல பார்வையாளர்களைக் கண்டது. ஆங்கிலேயர்களால் பட்டியலிடப்பட்ட அருங்காட்சியக பதிவுகளின்படி 1870 களில் சராசரியாக இங்கு வருவோரின் எண்ணிக்கை 2,80,000 ஆக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கு வருகின்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை 4,00,000க்கு உயர்ந்தது. . அருங்காட்சியக அலுவலர்களின் கூற்றுப்படி, இங்கு ஒவ்வோர் ஆண்டும் 90,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

நிர்வாகம் தொகு

கர்நாடக மாநில தொல்பொருள் துறை அருங்காட்சியகம் இதனை நிர்வகிக்கிறது. இது தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக இயக்குநரக நிர்வாகத்தின் கீழ் வருகிறது. [8] இந்தியாவின் 13 வது நிதி ஆணையம் நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியகங்களின் மேம்பாட்டுக்காக கர்நாடகா அரசிற்கு மானியமாக 1 பில்லியன் ரூபாயை அனுமதித்துள்ளது .

புகைப்படத்தொகுப்பு தொகு

குறிப்புகள் தொகு

  1. S. K. Aruni (14 March 2012). "Nuggets of heritage stored for posterity". The Hindu (Bangalore). http://www.thehindu.com/news/cities/bangalore/article2994261.ece. பார்த்த நாள்: 3 December 2012. 
  2. Mohit. M Rao (26 March 2012). "When a museum turns into a relic of the past". The Hindu (Bangalore). http://www.thehindu.com/news/cities/bangalore/article3223795.ece. பார்த்த நாள்: 3 December 2012. 
  3. "Edward Balfour", Wikipedia (in ஆங்கிலம்), 2019-08-03, பார்க்கப்பட்ட நாள் 2020-01-02
  4. Sudhindr. A. B. (3 May 2010). "Exploring the wonders of Bangalore". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 1 பிப்ரவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110201122731/http://www.thehindu.com/life-and-style/kids/article420621.ece. பார்த்த நாள்: 3 December 2012. 
  5. 5.0 5.1 Khajane, Muralidhara (31 October 2006). "An apt time to get classical language tag". The Hindu (Hassan) இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071001015326/http://www.hindu.com/2006/10/31/stories/2006103108870500.htm. பார்த்த நாள்: 3 December 2012. 
  6. Meera Iyer (2012). "Why we shouldn't forget Sankey". Deccan Herald (Bangalore). http://www.deccanherald.com/content/226898/why-we-shouldnt-forget-sankey.html. பார்த்த நாள்: 3 December 2012. 
  7. Meera Iyer (December 2009). "Why the relics still lie here..". Deccan Herald (Begur). http://www.deccanherald.com/content/165162/why-relics-still-lie-there.html. பார்த்த நாள்: 3 December 2012. 
  8. R. Krishna Kumar (2 January 2011). "117 monuments in State identified for restoration". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 19 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131019070711/http://www.hindu.com/2011/01/02/stories/2011010255910500.htm. பார்த்த நாள்: 3 December 2012. 

மேலும் காண்க தொகு