அரிசி பிரிக்கும் இயந்திரம்

அரிசி பிரிக்கும் எந்திரம் (rice color sorting machine) நிறத்தைச் சார்ந்து அரிசியை பிற கல் மணிகள், பதர் அரிசி, கறுப்பு அரிசி, உமிநீங்கா அரிசி போன்றவற்றில் இருந்து பிரிக்கும் எந்திரமாகும். ஓர் உயர் பிரிதிற நிற வேஊபாடு அறியும் ஒளியியல் உணரி, பிரிப்பு எந்திரம் தன்னியக்கமாக அரிசியில் இருந்து மாறுபட்ட நிறக் குறுணைகளை பிரிக்க பயன்படுகிறது; இவாறு மாசுகளை நீக்குவது அரிசியின் தரத்தை உயர்த்துகிறது.

பதப்படுத்தல் செயல்முறைகள் தொகு

அரிசி பதப்படுத்தல் அரிசி ஆலைகளில் நிகழ்கிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் கதிக்கவைத்து உலர்த்தப்படுகின்றன. பிறகு கல்லும் உமியும் நீக்கப்பட்டு அரிசியாக பிரிக்கப்படுகிறது. பிறகு அரிசி நிறப் பிரிப்பு எந்திரத்து ஓடுபட்ட வழியாகக் கொண்டு செல்லப்பட்டு எந்திர உச்சியில் உள்ள பெய்கலனில் கொட்டப்படுகிறது. இது நிறப் பிரிப்பியின் அழுத்தக் குழாயூடாகப் பாய்கிறது. அப்போது நிற வேறுபாடு காணியின் உணரிகள் நிற வேறுபாட்டுக் குறைகளைக் கண்டுபிடித்து, வெளியேற்றிக்கு நுனிக்குழலைத் திறக்கும்படி கட்டளை இடுகிறது. இந்த நுனிக்குழல் அமுக்கக் காற்றுள்ள கவாடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்காற்று நிறக்குறையுள்ள பொருள்களை அரிசியில் இருந்த்து வீசியடிக்க பயன்படுத்தப்படுகிறது. அரியில் அமையும் குறைவகைகளாக, கருப்பு, வெள்ளை, மஞ்சள் குறுணைகள், எலிப் புழுக்கைகள், முதிராத பதர்கள் ஆகியன அமைகின்றன.

பணிச் சூழல் தொகு

  1. பணிச் சூழல்: இயல்பு வெப்பநிலை, இயல்பு அழுத்தம், காற்றூட்ட உலர்த்தல், தூசற்ற இடம். இயங்கும் வெப்பநிலை: 20 - 45 °செ.
  2. காற்று அமைப்பு: காற்று அமுக்கி, காற்றுத் தொட்டி, காற்று உலர்த்தி, மின்சுட்டைப் புல நிறப் பிரிப்பி. வழக்கமான இயஙு அழுத்தம், குறைந்தது, 0.2 MPa.
  3. இயல்பு மின்னழுத்தம்: காற்று அமுக்கி 380 வோ, 50 எர்ட்சு(Hz). நிறப் பிரிப்பி: 220 வோ, 50 எர்ட்சு.

வகையும் வணிகப் படிமமும் தொகு

  1. ஒளிமின் படக் கருவிவழி நிறப் பிரிப்பி( இத்தொழில்நுட்பம் சந்தையில் இருந்து காலாவதியாகி விட்டது): 160அலைவரிசைகள்,240 அலைவரிசைகள், 320 அலைவரிசைகள்.
  2. நிற வேறுபாடு காணிவழி பிரிப்பி

வெளி இணைப்புகள் தொகு