அரிசுட்டாட்டிலிய இயற்பியல்

அரிசுட்டாட்டில் இயற்பியல்

அரிசுடாட்டிலிய இயற்பியல் (Aristotelian physics) கிரேக்க மெய்யியலாளரான அரிசுட்டாட்டில் (கிமு 384-322) இயற்றிய இயற்பியல் எனும் இயற்கை அறிவியல் பற்றிய நூல் வடிவமாகும். அரிசுட்டாட்டில் இந்நூலில் உறழ்திணை, உயிர்த்திணைப் பண்டங்களின், புவியக, வானகப் பண்டங்களின் மாற்றங்களை அதாவது இடஞ்சார்ந்தனவும் உருவளவு, எண்ணிக்கை ஆகிய அளவு சார்ந்தனவும் உருவாதல், அழிதல், நிலவல் சார்ந்தனவும் ஆகிய அனைத்து இயற்கைப் பொருள்களின் மாற்றங்கள் சார்ந்த பொது மாற்ற நெறிமுறைகளை அல்லது அடிப்படைகளை, நிறுவ முயன்றுள்ளார்). இவர் இயற்பியலை உளஞ்சார்ந்த மெய்யியல், புலன் பட்டறிவு, நினைவு, உடற்கூறு இயல், உயிரியல் ஆகிய அனைத்தையும் சார்ந்த விரிவான புலமைப்பரப்பாகக் கருதினார். இது சிந்தனை சார்ந்த அனைத்து அடிப்படைகளையும் அதாவது பொதுவான இயற்கை சார்ந்த பல்வேறு புலமைப்பரப்புகளையும் உள்ளடக்கியது.

அரிசுட்டாட்டிலிய இயற்பியல் புவியை மையமாக்க் கொண்டு அதைச் சுற்றி அமைந்த மையமொன்றிய விண்கோளங்களால் ஆகிய அண்டக் கட்டமைப்பு பற்றி ஆய்கிறது, இவர் புவிக்கோளம் மண், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு த்னிமங்களால்(பூதங்களால்) ஆனதாகவும் இவை மாற்றத்துக்கும் அழிவுக்கும் உட்பட்ட்தாகவும் கருதினார். விண்கோளங்கள் ஐந்தாம் தனிம்மான(பூதமான) வெளி அதாவது மாற்றமற்ற ஈதரால் ஆயதாக்க் கருதினார். இவற்றால் ஆகிய பொருட் பண்டங்களுக்கு இயலபான இயக்கம் அமைகிறது. மண்ணும் நீரும் கீழ்நோக்கி புவியில் வீழ்கின்றன. காற்றும் நெருப்பும் புவியில் இருந்து மேல்நோக்கி எழுகின்றன. இத்தகைய இயக்கத்தின் வேகம் அப்பண்ட ஊடகங்களின் அடர்த்தியையும் எடையையும் சார்ந்திருக்கும். வெற்றிட்த்தில் பண்டங்கள் வரம்பிலா வேகத்தில் இயங்க நேரும் என்பதால் வெற்றிடமே நிலவுவதில்லை என அரிசுட்டாட்டில் வாதிட்டார்.

இவர் புவிநிகழ் மாற்றங்களுக்கான நான்கு விளக்கங்களை அல்லது காரணங்களை விவரித்தார்: அவை பொருட்சார்ந்தன, உருவஞ்சார்ந்தன, விளைவுசார்ந்தன, அறுதியானவை என நான்கு வகைப்பட்டனவாகும். உயிர்த்திணைப் பண்டங்களைப் பொறுத்தவரை அவை நோக்கீடு முறைகளால் அறியமுடிந்த இயற்கை வகைகளாகக் கொண்டார். இந்த இயற்கை வகைகளில் அடிப்படை வகைகளும் அந்த அடிப்படை வகைகளால் உருவாகும் குழு வகைகளும் அடங்கும். தற்காலச் செய்முறைகளைப் போன்ற செயல்களேதும் மேற்கொள்ளவில்லை. இவர் திரட்டப்படும் எண்ணற்ற தரவுகளையும் நோக்கீடுகளையுமே சார்ந்தே உடல் உருவளவு, ஆயுள் போன்ற அளவியலான உறவுகள் சார்ந்த கருதுகோள்களை உருவாக்கினார்.

முறைகள் தொகு

 
பண்டைய கிரேக்க மெய்யியலாளர் அரிசுட்டாட்டிலின் இயற்பியல் நூலின் 1837 ஆம் ஆண்டைய பதிப்பின் ஒரு பக்கம் ; இந்நூல் இயல் மெய்யியல், தற்கால இயற்பியல் சார்ந்த த்லைப்புகளின் பகுதிகள் எனப் பல கருப்பொருள்களை விவரிக்கிறது.

இயற்கை எங்கிலுமே ஒழுங்கான காரணமுடையதாய் உள்ளது.[1]

—அரிசுட்டாட்டில், இயற்பியல் VIII.1

பொதுவான மாந்தப் பட்டறிவோடு பொருந்தியிருந்தாலும், அரிசுட்டாட்டிலிய இயற்பியல் நெறிமுறைகள் அல்லது அடிப்படைகள் கட்டுபடுத்திய அளவியலான செய்முறைகளைச் சார்ந்து அமைவதல்ல; அவை இன்றைய அறிவியல் வேண்டுவது போன்று புடவியை நடைமுறையில் துல்லியமாக அளவியலான முறையில் உருவகிப்பதில்லை அல்லது விவரிப்பதில்லை. இவரது சமகாலத்தவரான அரிசுட்டார்க்கசு இந்த நெறிமுறைகளை மறுத்து புடவிக்கான கதிர்மையக் கோட்பாட்டை முன்மொழிந்தார். ஆனால் அச்சமகாலக் கண்ணோட்டங்கள் எடுபடவினலை; ஏற்கவும் படவில்லை. அன்றாடப் பட்டறிவு சார்ந்து அரிசுட்டாட்டிலின் அடிப்படைகளை மறுப்பது அரியதாயிருந்தது. ஆனால், பிறகு தோன்றிய அறிவியல் முறை தனது மேம்பட்ட தொழில்நுட்பங்களான தொலைநோக்கி, வெற்றிட எக்கி ஆகியவற்றைப் பயன்கொண்டு செய்த செய்முறைகள் வாயிலாகவும் கவனமான அளவீடுகள் வாயிலாகவும் எளிதாக அரிசுட்டாட்டிலிய இயற்பியல் அடிப்படைகளை எதிர்கொண்டது.

பதினேழாம் நூற்றாண்டில் அறிவியலை வென்றெடுத்த இயல் மெய்யியலாளர்கள் த்ம் நெறிமுறைகளின் புதுமையை வற்புறுத்த, தம் நெறிமுறைகளை அடிக்கடி அரிசுட்டாட்டிலிய இயற்பியலின் நெறிமுறைகளோடு ஒப்பிட்டு முரண்பாடுகளை விளக்கினர். முந்தைய வகை இயற்பியல் அளவியலான முறையினைப் புறந்தள்ளி பண்பியலான முறையைப் போற்றி, கள இயக்கத்தை ஆய்வு செய்ய கணிதவியலைப் புறந்தள்ளியதை எடுத்து விளக்கினர். மாறாக முன்னது அறுதிக் காரணம் போன்ற விளக்க நெறிமுறைகளையும் நம்பிக்கைச் சார்ந்தவற்றையுமே பின்பற்றியது. இருந்தாலும் அரிசுட்டாட்டிலிய இயற்பியல், தன் புலமைப்பர்ப்பில் இயற்பியலின் பான்மைகளாக பருமைகள் ( magnitudes -megethê), இயக்கம் (அல்லது “நிகழ்வு அல்லது செயல்முறை” அல்லது “படிப்படியான மாற்றம்” – kinêsis), காலம் (chronon) ஆகிய்வற்றையே கருதுகிறது. (இயற்பியல் இயல் III.4 202b30–1). உண்மையில், இயற்பியல் பேரளவில் இயக்கம் சார்ந்த பகுப்பாய்வையும் அதைச் சார்ந்த மற்ற கருத்தினங்களையுமே பயில்கிறது.[2]

—மைக்கேல் ஜே. வைட், "வரம்பிலி, வெளி, காலம் பற்றிய அரிசுட்டாட்டிலின் கருத்துகள்" –அரிசுட்டிலுக்கான பிளாக்வெல் துணைநூல்

அரிசுட்டாட்டிலிய இயற்பியலுக்கும் தற்கால புத்தியற்பியலுக்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. முந்தையது கணிதவியலைப் பெரிதும் பயன்படுத்துவதே இல்லை. என்றாலும் அரிசுட்டாட்டிலிய இயற்பியல் புத்தியற்பியலோடு அதன் புலன்சார் பட்டறிவிலும் தொடர்ச்சியிலும் பொருந்துவதை அண்மிய சில ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன.[3]

கருத்தினங்கள் தொகு

செவ்வியல் தனிமங்களும்(பூதங்களும்) விண்கோளங்களும் தொகு

விண்கோளங்கள் தொகு

புவியக மாற்றங்கள் தொகு

 
நான்கு புவியகத் தனிமங்கள்

குறிப்புகள் தொகு

a ^ இங்கு, "நிலம்" எனும் சொல் புவிக் கோளைக் குறிப்பிடாது. தற்கால அறிவியலின்படி, புவி பல தனிமங்களினால் ஆயதாகும்|. தற்கால வேதித் தனிமங்களும் அரிசுட்டாட்டிலின் செவ்வியல் தனிமங்களும்(பூதங்களும்) ஒத்தனவல்ல; எடுத்துகாட்டாக, "காற்று" எனும் சொல் நாம் மூச்சுவிடும் காற்றுள்ள வளிமண்டலத்தைக் குறிப்பிடாது. எனவே, நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய செவ்வியல் தனிமங்கள்(பூதங்கள்) நேரடிக் குறிப்புப் பொருள்கள் அல்ல;அடிப்படைக் கருத்தினங்களே ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Lang, H.S. (2007). The Order of Nature in Aristotle's Physics: Place and the Elements. Cambridge University Press. பக். 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521042291. https://books.google.com/books?id=me_pKWN2p_0C&pg=PA290. 
  2. White, Michael J. (2009). "Aristotle on the Infinite, Space, and Time". Blackwell Companion to Aristotle. பக். 260. 
  3. Rovelli, Carlo (2015). "Aristotle's Physics: A Physicist's Look". Journal of the American Philosophical Association 1 (1): 23–40. doi:10.1017/apa.2014.11. 

தகவல் வாயில்கள் தொகு

மேலும் படிக்க தொகு

  • Katalin Martinás, “Aristotelian Thermodynamics” in Thermodynamics: history and philosophy: facts, trends, debates (Veszprém, Hungary 23–28 July 1990), pp. 285–303.