அலகாபாத் ஒப்பந்தம்

அலகாபாத் ஒப்பந்தம் (Treaty of Allahabad), அக்டோபர் 1764-இல் புக்சார் சண்டையில் தோற்ற முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம், வங்காள நவாப் மற்றும் அயோத்தி நவாப்புகளை வென்ற கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகி ராபர்ட் கிளைவ் ஆகியவர்களுக்கு இடையே 12 ஆகஸ்டு 1765 அன்று செய்து கொள்ளப்பட்ட போர் உடன்படிக்கை ஆகும். [1]

முகலாயப் பேரரசர் ஷா ஆலம், கிழக்கு இந்தியாவில் வரி வசூலிக்கும் உரிமையை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கும் அலகாபாத் ஒப்பந்தம்

அலகாபாத் ஒப்பந்தத்தின் விளைவாக இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானியர்களின் ஆட்சி காலூன்ற வழி வகுக்கப்பட்டது. [2]

அலகாபாத் ஒப்பந்தப்படி, கிழக்கிந்தியப் பகுதியான வங்காளம், பிகார் மற்றும் ஒடிசாவில் மக்களிடமிருந்து நிலவரியை (திவானி) நேரடியாக வசூலிக்கும் உரிமையை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. அதற்கு பதிலாக கிழக்கிந்திய கம்பெனியின் சார்பில், முகலாயப் பேரரசின் அலகாபாத் அரண்மனை பராமரிப்புச் செலவாக ஆண்டுதோறும் ரூபாய் 26 இலட்சம் வழங்கப்பட்டது.

மேலும் பக்சார் சண்டையில் தோற்ற அயோத்தி நவாப் சூஜா உத் தௌலாவிற்கு அவத் பகுதியை ஆங்கிலேயர்கள் நவாப்பிடம் திரும்ப வழங்கப்பட்டதற்கு கைமாறாக ரூபாய் 53 இலட்சம் போர் நட்ட ஈடு தொகையாக கிழக்கிந்திய கம்பெனியினர் வசூலித்தனர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகாபாத்_ஒப்பந்தம்&oldid=3363252" இலிருந்து மீள்விக்கப்பட்டது