அலெக்சி பேவர்ஸ்கி

அலெக்சி யெவ்கிராபோவிச் பேவர்ஸ்கி (Alexey Yevgrafovich Favorskii) (3 March 1860 - 8 ஆகஸ்ட் 1945), ஒரு சோவியத் மற்றும் ருசிய வேதியியலாளர் ஆவார். சோசலிச தொழிலாளர் அமைப்பின் கதாநாயகனும் ஆவார்.(1945).

அலெக்சி பேவர்ஸ்கி
பிறப்பு 3 மார்ச்சு 1860
பாவ்லோவோ, நீசுனி நோவ்கோரத் ஆளுநரகம், உருசியப் பேரரசு
இறப்பு8 ஆகத்து 1945(1945-08-08) (அகவை 85)
சென் பீட்டர்சுபெர்கு, சோவியத் ஒன்றியம்
தேசியம்உருசியர்
Alma materமாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் ,
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்அலெக்சாண்டர் பட்லெரோவ்
முக்கிய மாணவர்செர்கை வசில்ஜெவிச் லெபெதேவ்,
விளாடிமிர் ஐபாடிய்ப்
அறியப்பட்டதுபேவர்ஸ்கி மறுசீரமைப்பு வினை,
பேவர்ஸ்கி வினை, செயற்கை இரப்பர்

வாழ்க்கை தொகு

பேவர்ஸ்கி 1878 முதல் 1882 வரை இம்பீரியல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் வேதியியல் படித்தார். இவர் பல ஆண்டுகளாக அலெக்சாண்டர் பட்லெரோவின் ஆய்வகத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். மேலும் 1891 ஆம் ஆண்டில் விரிவுரையாளரானார். 1895 ஆம் ஆண்டில், இவர் தனது முனைவர் பட்டத்தினைப் பெற்றார் மற்றும் தொழில்நுட்ப வேதியியல் பேராசிரியரானார். 1894 ஆம் ஆண்டில் இவர் பேவர்ஸ்கி மறுசீரமைப்பு வினையைக் கண்டுபிடித்தார். 1900 மற்றும் 1905 க்கு இடையில் பேவர்ஸ்கி வினை இவரது பெயருடன் இணைக்கப்பட்டது. இவர் 1897 ஆம் ஆண்டு முதல் புதிய கரிம வேதியியல் துறையில் பணியாற்றினார், மேலும் 1934 ஆம் ஆண்டு முதல் 1937 ஆம் ஆண்டு வரை அதன் இயக்குநராக பணியாற்றினார். செயற்கை இரப்பர் உற்பத்தியை மேம்படுத்தியதற்காக, பேவர்ஸ்கிக்கு 1941 ஆம் ஆண்டில் ஸ்டாலின் பரிசு வழங்கப்பட்டது.

பேவர்ஸ்கி 1945 ஆம் ஆண்டில் இறந்தார். மேலும் இவர் வோல்கோவ்ஸ்கி ஆர்த்தடாக்ஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

 
ஃபேவர்ஸ்கி குடுவை - ஃபேவர்ஸ்கி கண்டுபிடித்த குடுவை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சி_பேவர்ஸ்கி&oldid=3649279" இலிருந்து மீள்விக்கப்பட்டது