அலெக்சேய் பாவ்லோவிச் கான்சுகி

ரஷ்ய வானியலாளர்

அலெக்சேய் பாவ்லோவிச் கான்சுகி (Aleksey Pavlovitch Hansky) (Алексей Павлович Ганский; 20 ஜூலை 1870, ஒதேசா – 11 ஆகத்து 1908, சிமீசு) ஓர் உருசிய வானியலாளர் ஆவார்.[1]


வாழ்க்கை தொகு

கான்சுகி பள்ளிப் படிப்பை முடித்து ஒதேசா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் வானியற்பியலிலும் வான் ஒளிப்படவியலிலும் பாரீசில் இருந்த மியூடன் வான்காணகத்திலும் இலெப்னிட்சு வானியர்பியல் நிறுவன போட்சுடாம் வானியற்பியல் வான்காணகத்திலும் பன்முறை மாறிமாறித் தங்கி ஆராய்ச்சியை மேற்கொண்டார். இவரது முதன்மையான ஆர்வம் சூரிய மேற்பரப்பின் கட்டமைப்பிலும்செயல்பாட்டிலும் கவிந்த்ருந்த்து. குறிப்பாக, இவர் சூரிய மாறிலி பற்றியும் மணியாக்கம் (சூரிய இயற்பியல்) பற்றியும் சூரியக் கரும்புள்ளிகள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.

கான்சுகி பல அறிவியல் தேட்டங்களில் பங்கேற்றார். இவர் நோவயாசெம்லியாவில் இருந்து 1896 ஆகத்து 9 சூரிய ஒளிமறைப்பையும் அக்லொசேபிரேவில் இருந்து 1905 ஆகத்து 30 சூரிய ஒளிமறைப்பையும் நோக்கினார். இவர் 1901 இல் சுபிட்சுபெர்கன் தேட்ட்த்தில் புவிக்கோளத்தின் உருவ அளவுகளை வானியல்/புவிப்புற அளக்கையால் கண்டறிய கலந்துகொண்டார்.இவர் 1907 இல் துருக்கித்தானத் தேட்டத்தில் [[List of solar eclipses in the 20th century|1907 ஜனவரி 14 சூரிய ஒளிமறைப்பை நோக்க கலந்துகொண்டார். ஆனால் இந்நோக்கம் மோசமான வானிலையால் நிறைவேறவில்லை. நோக்கீடுகளுக்காகவும் அளவீட்டிற்காகவும் வான் ஒளிப்படம் எடுக்கவும் இவர் மாண்ட் பிளாங்கை பத்துமுறைக்கும் மேலாக ஏறியுள்ளார்.

இவர் 1905 இல் புல்கொவோ வான்காணக இணை வானியலாளரானார். மேலும் 1908 தொடக்கத்தில், அதாவது மே மாதத்தில், சிமீசு வான்காணகத்தில் சேர்ந்தார். இவ்வான்காணகம் 1900 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அங்கே புதிய ஆராய்ச்சித் திட்டத்தை ஆகத்து மாதத்தில் தொடங்கிய பின்னர் கருங்கடலில் நீந்தும்போது மாரடைப்பால் இறந்துவிட்டார்.[2]

தகைமை தொகு

1927 இல் கண்டுபிடிக்கப்பட்ட குறுங்கோள் 1118 கான்சுகியா இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Prof. Dr. H. Kobold, தொகுப்பாசிரியர் (September 1908). "none". Astronomische Nachrichten (Kiel: C. Schaidt) 178 (4272): 399–400. doi:10.1002/asna.19081782412. Bibcode: 1908AN....178..399.. 
  2. "none". Wiener Luftschiffer-Zeitung VII. Jahrgang (12): p. 311. December 1908. 

வெளி இணைப்புகள் தொகு