அலெக்ஸ் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

அலெக்ஸ் (இறப்பு: மே 1, 2011) தமிழ்த் திரைப்பட நடிகரும் மந்திர வித்தைகளில் நிபுணரும் ஆவார்.

திருச்சி துரைசாமிபுரத்தை சேர்ந்த இவர் ரயில்வேயில் பணியாற்றி வந்தவர். வள்ளி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து மிட்டா மிராசு, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் வித்தியாசமான வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

நடிக்க வருவதற்கு முன்பே மந்திரவித்தைக் கலையில் நிபுணத்துவம் பெற்று சிறந்த மாஜிக் கலைஞராக திகழ்ந்தவர். 2010 ஆம் ஆண்டில் திருச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் 24 மணி நேரம் தொடர்ந்து மாஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். அதற்கு முன்பு, 600 மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து 12 மணி நேரம் மாஜிக் செய்ததற்காக லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றார்.

மறைவு தொகு

2011 மே 1 ஆம் நாள் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை மருத்துவமனை ஒன்றில் காலமானார். 52 வயதான இவருக்கு திரவியமேரி என்ற மனைவியும், பிரின்சி, டீனா என இரு மகள்களும் உள்ளனர்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்ஸ்_(நடிகர்)&oldid=3232375" இலிருந்து மீள்விக்கப்பட்டது