ஆங்க் (Aang) நிக்கலோடியன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவதார்: தி லாஸ்டு ஏர்பெண்டர் அடைபட நிகழ்ச்சியின் முதன்மைக் கதாப்பாத்திரம்.

ஆங்க்
அவதார் தி லாஸ்டு ஏர்பெண்டர் / தி லெஜன்டு ஆஃப் கோரா கதை மாந்தர்
Aang kneeling in a battle pose, holding his staff behind him.
தகவல்
வளைக்கக் கூடியது காற்று (பிறவியிலேயே)
நீர் (போரிடல்)
நிலம்
நெருப்பு(மின்னலைத் திருப்பி அனுப்பல்)
ஆற்றல்
முடியின் நிறம் கருப்பு (பொதுவாக மொட்டையடிக்கப்பட்டு இருக்கும்)
நிலை முதன்மைப் பாத்திரம்

காற்று, நிலம், நீர், நெருப்பு ஆகிய நான்கு பூதங்களுள் ஒன்றை அடக்கி ஆளக்கூடியோர் புவியில் வாழ்ந்ததாகவும் அவதார் என்ற ஒருவர் மட்டும் இந்த நான்கையுமே அடக்கி ஆளக்கூடிய ஆற்றல் பெற்றிருந்ததாகவும் இந்தக் கதை சொல்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அவதார் திடீரென மறைந்து விட்டார். ஆவி உலகோடு தொடர்பு கொள்ளக் கூடிய ஒரே ஆளான அவதார் இல்லாததால் உலகின் சமநிலை பாதிக்கப்படுகிறது. நெருப்பு நாடு மற்ற நாடுகளான நில நாடு, நீர் இனக்குழு, காற்றுத் துறவிக்குழு ஆகியோரை அடக்க ஆரம்பித்தது. நெருப்பு நாட்டு அரசன் உலகின் பேரரசனாய் முடிசூட்டிக் கொள்ள விரும்பினான். நெருப்பைத் தவிர மற்ற பூதங்களைக் கட்டுப்படுத்துவது தடைசெய்யப்பட்டுது. கடைசி அவதார் காற்றுத் துறவிக்குழுவில் தான் பிறப்பார் என்பது நன்கறியப்பட்டதால் காற்றுத் துறவிக்குழுவினர் அனைவரும் நெருப்பு நாட்டினரால் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் நீர் இனக்குழுவைச் சேர்ந்த கட்டாரா மற்றும் அவளது சகோரனான சூக்கோ இருவரும் உறைபனிப் பாளத்தில் இருந்த ஒரு சிறுவனையும் பறக்கும் காட்டெருமையையும் கண்டறிகின்றனர். அவன் தான் ஆங்க். காற்றுத் துறவிக் குழுவில் தப்பி வாழும் ஒரே ஒரு சிறுவன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்க்&oldid=1555878" இலிருந்து மீள்விக்கப்பட்டது